Posts

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 10 நாட்களில் மதிப்பெண் சான்று வழங்குவது என சென்னையில் நடைபெற்ற பள்ளிகல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக மதிப்பெண் சான்று 3 மாதம் வரை செல்லுபடியாகும்.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால்,ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா்ள் நகல் கிடைக்கும் எனவும் முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.

652 கணினி பயிற்றுனர் சான்றிதழ் சரிபார்ப்பு - எதிர்பாராத காரணங்களால், தங்களுக்கு உரிய சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி நாளான மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ளலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TRB PGT RESULT PUBLISHED ON 6.2.2015 | 1807 பணியிடங்களுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

DEO EXAM RESULT SOON | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதன்மைத் தேர்வு 30.05.2015,31.05.2015 01.06.2015 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.