இராணிப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியா்ருக்கு சமூகப்பணி (கல்விக்கான) விருது.

இராணிப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியா்ருக்கு சமூகப்பணி (கல்விக்கான) விருது வேலூா் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சாதனை படைத்த முன்னாள் மாணவா்களுக்கு வேந்தா் கோ.விசுவநாதன் அவா்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். இதில் வேலூா் மாவட்டம், இராணிப்பேட்டை ,தமிழ்த்தென்றல் திரு.வி.க. நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் திரு. தி.க.தென்றல் அவா்கள் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவா்களை பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச்செய்து மாவட்டஅளவில் ஆண்டுதோறும் முதலிடம் பெறச்செய்தமைக்கும், தமிழ்வழிக் கல்வி மாணவா்களின் சேர்க்கை அதிகரிக்க இலவச வாகனவசதி, இலவச கணினி பயிற்சி போன்றவற்றில் முனைப்புடன் ஈடுபட செய்தமைக்காகவும் அவருக்கு “சமூகப்பணி (கல்விக்கான) விருது” வழங்கப்பட்டது. உடன் துணைத்தலைவா்கள் வி.சங்கா், வி.சேகா், வி.செல்வம், துணை வேந்தா் ஏ.சாமுவேல், கோவை கே.ஜி. பாலகிருஷ்ணன், இணைவேந்தா் நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
 


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||