இலவச உடற்கல்வி பாடப்புத்தகம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.

இலவச உடற்கல்வி பாடப்புத்தகம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.|உடற்கல்வி பாடத்திற்கும் இலவச பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்க மண்டல தலைவர் அகஸ்டின் ராஜா, மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் அற்புதசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மற்ற பாடங்களுக்கு வழங்குவதை போல், உடற்கல்வி பாடத்திற்கும், பிளஸ்2 வரை விலையில்லா பாட புத்தகம் வழங்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு இரண்டாம் நிலை உடற்கல்வி இயக்குநர்களை நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணம் வாங்கவும், போட்டிகள் நடத்தவும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில், கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||