மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு.

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு | தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், அரசு ஊழியர்களுக் கான ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும் என தெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக .பன்னீர் செல்வம் இருந்தார். அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கடந்த வாரம் துறைகள் வாரியாக முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. அவற்றை தொகுத்து முழுமையான பட்ஜெட் தயாரிக்கப்படும். இப்பணி கள் சில தினங்களில் முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் குறித்து முதல்வர் முடிவு செய் வார். வழக்கமாக மார்ச் இரண்டாம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் 3-ம் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது'' என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபித்து கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துள்ளார். 500 மதுக்கடைகள் மூடல், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம், மகப்பேறு உதவித் தொகை உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், பல்வேறு திட்டங்களுக்கான தொடர் நிதியும் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும் தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த அரசு மீது மக்களி டையே அதிருப்தியும் எதிர்ப்பும் உள்ளது. இதை மாற்றுவதற்காக பொதுமக்களை குறிப்பாக பெண் களை கவரும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஓய்வு வயது உயர்வு இந்த பட்ஜெட்டில் அரசு ஊழி யர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற் போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும். ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு ஓய்வுபெறும் வயதை கடந்த 1998-ல் 60 ஆக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் உயர்த்த உள்ளதாக பலமுறை கூறப்பட்டது. ஆனால், உயர்த்தவில்லை. தற்போது ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என தகவல் கசிந்துள்ளது. இது ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அவர்கள் ஆதரிப்பார்கள். அதே நேரம் வயது உச்சவரம்பை நெருங்கி அரசுப் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பாதகமான முடிவாகும். வரும் 2018 முதல் 2020 வரை சுமார் 2.5 லட்சம் பேர் வரை பணி மூப்பால் ஓய்வு பெறவுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள் நீட்டிப்பதன் மூலம், அரசுக்கு ஒரு மடங்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலும், வரும் ஆண்டுகளில் பணியாளர் தேர்வும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மறுப்பதாகும். எனவே, இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
IT FORM VERSION 2017.1 DOWNLOAD
TNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017
NEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017
TNPSC ANNUAL PLANNER 2017 DOWNLOAD
HSC EXAM PRIVATE HALL TICKET DOWNLOAD.
Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017
all education news online 24 x 7 news
latest study materials download
latest question papers download
புதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...
FLASH NEWS
EDU NEWS
TET NEWS
TRB NEWS
SCHOOL NEWS
COLLEGE NEWS
GENERAL NEWS
EXAM NEWS
EMPLOYMENT NEWS
DATE RELATED NEWS
COUNSELLING NEWS
PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT
DSE | DEE | G.O | ALL DOWNLOADS
PROMOTION PANEL 2016 FOR SCHOOL EDUCATION DEPT
SSLC STUDY MATERIALS
SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.
PLUS TWO STUDY MATERIALS
PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.
NEET STUDY MATERIALS, QUESTION PAPERS AND KEY ANSWERS.
TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.
TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.
TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.
SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE
TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT
TAMIL FONTS DOWNLOAD
FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT
ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.
RH 2016
TEXT BOOKS ONLINE
AUDIO MATERIALS ONLINE
ONLINE TEST FOR PLUS TWO
ONLINE TEST FOR COMPETITIVE EXAMS
TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.
Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.
Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.
Subscribe to get Kalvisolai News Daily Via your Email
Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email
கல்விச்சோலை | கட்டுரைகள்
www.kalvisolai.com
www.news.kalvisolai.com
www.pallikalvi.kalvisolai.com
www.sslc.kalvisolai.com
www.plustwo.kalvisolai.com
www.trb.kalvisolai.com
www.tnpsc.kalvisolai.com
www.forms.kalvisolai.com
www.tngo.kalvisolai.com
www.audio.kalvisolai.com
www.video.kalvisolai.com
www.tamilgk.kalvisolai.com
www.employment.kalvisolai.com
www.textbook.kalvisolai.com
www.onlinetest.kalvisolai.com
www.tamilarticle.kalvisolai.com
www.smartnews.kalvisolai.com
www.smartclass.kalvisolai.com
www.doctor.kalvisolai.com
www.kitchen.kalvisolai.com

Comments