குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு.

குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு | 85 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,602 பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களில் 464 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசமாக படித்தவர்கள். 29 துணை கலெக்டர்கள், 34 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 85 உயர் பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்தனர். முதல்நிலை தேர்வு 32 மையங்களில் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்நிலை தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தேர்வில் 4,602 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அக்டோபர் 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கிறது. முடிவு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. இந்த குரூப்-1 முதல்நிலை தேர்வில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்குகிற மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து மனிதநேய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்மை தேர்வு (மெயின்தேர்வு) பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்கட்ட தேர்வுக்கான நுழைவு சீட்டு ஆகியவற்றுடன் இன்று (சனிக்கிழமை) முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும், தேர்வுகள், பாடப்புத்தகங்கள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. விடுதி வசதிகள் தகுதியின் அடிப்படையில் இலவசமாக செய்துதரப்படும். மனிதநேய மையத்தின் மின்அஞ்சல் முகவரி manidhaneyam@gmail.com மற்றும் இணையதள முகவரி www.saidais.com இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே 74 பணியிடங்கள் கொண்ட குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நடத்தியது. இந்த தேர்வு முடிவு ஏற்கனவே வெளியிடப்பட்டன. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்க உள்ளது.  DOWNLOAD

மேலும் செய்திகளை படியுங்கள்...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments