தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது

தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது | இந்த ஆண்டு தேசிய கட்டிடக்கலை திறனறிவு தேர்வில் (நடா 2017) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கட்டிடக்கலை என்ஜினீயரிங் பாடப்பிரிவுக்கு கட்டிடக்கலை குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய இந்த கல்வியாண்டில் புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு ஒன்றினை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி நடக்கிறது. இதற்கு 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் அடுத்த மாதம் 18-ந் தேதி வெளியிடப்படும். 19-ந் தேதி மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளர் பி.மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை படியுங்கள்...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments