அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது | மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 22-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த 'ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்ட முடிவில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் அ.மாயவன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க தாமதமானால் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு அமைத்துள்ள குழு தீர்வுகாணாமல் காலநீட்டிப்பு செய்து வருகிறது. இதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆகஸ்டு 5-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளோம். அதைத்தொடர்ந்து 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments