மீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது

மீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது | தமிழ்நாடு மீன்வள சார்நிலைப்பணியில் அடங்கிய மீன்வள உதவி ஆய்வாளர் (12 காலிப்பணியிடங்கள்) மற்றும் முதலாள் (கடல் சார்ந்தது) (4 காலிப்பணியிடங்கள்) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் 1,529 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 37 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் தேர்வாணைய இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28-ந்தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments