‘பால விகாஷ்’ திட்டம் மூலம் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வி சத்திய சாய் சேவா அறக்கட்டளை தலைவர் பெருமிதம்

'பால விகாஷ்' திட்டம் மூலம் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வி சத்திய சாய் சேவா அறக்கட்டளை தலைவர் பெருமிதம் | 'பால விகாஷ்' திட்டம் மூலம் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படுவதாக சத்திய சாய் சேவா அறக்கட்டளையின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா சென்னையில் கூறினார். ஸ்ரீ சத்திய சாய் சேவா அறக்கட்டளை நிறுவனத்தின் மாநில மாநாடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டையொட்டி கருத்தரங்கம் நடந்தது. இதில் அறக்கட்டளை மாநில தலைவர் வரதன், தமிழக மின்வாரிய தலைவர் சாய்குமார், டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணுசீனிவாசன், முன்னாள் அகில இந்திய தலைவர் சீனிவாசன் மற்றும் டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனத்தின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா, நிருபர்களிடம் கூறியதாவது:- ஸ்ரீ சத்ய சாய் சேவா அறக்கட்டளை சார்பில் நலிவடைந்த பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் 'ஸ்ரீ சத்திய சாய் வித்யா ஜோதி' என்ற திட்டமும், நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சிகிச்சை அளிக் கும் வகையில் 'நடமாடும் மருத்துவமனை' என்ற திட்டமும் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறோம். இதில் வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 900 பள்ளிகளை மேம்படுத்தி உள்ளோம். 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 'பால விகாஷ்' என்ற கல்வி திட்டத்தை பகவான் பாபா வலியுறுத்தி உள்ளார். அந்த திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் குழந்தைகள் படித்து வருகின்றனர். நடமாடும் மருத்துவமனை கிராமப்புறங்களில் அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத இடங் களில், எங்களின் நடமாடும் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்களை தேடி சென்று உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 16 ஆயிரம் டாக்டர்கள், 45 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் மற்றும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 195 தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ரூ.37 கோடியே 29 லட்சத்து 46 ஆயிரம் செலவிடப்பட்டு உள்ளது. நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தன்னலமற்ற சேவை செய்துவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளை படியுங்கள்...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments