மீன்வளப் பல்கலை. பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மீன்வளப் பல்கலை. பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் பட்டப்படிப் பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரி வித்துள்ளது. இது குறித்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எஸ். பெலிக்ஸ், நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் (உயிரி தொழில்நுட்பம்) பட்டப் படிப்புக் கான சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பு சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள வாணியஞ்சாவடியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். அதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 வரை பல்கலைக்கழகத்தில் உள்ள 20 இடங்களில் சேர www.tnfu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 3 முதல் 31-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||