குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் புதுடெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவு கடந்த 20-ம் தேதி வெளியானது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராக தேர்வானார். இந்நிலையில், குடியரசுத் தலைவராக இருந்து வந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் அணி வகுத்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வாயிலில் இருவரையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பாரம்பரிய மரியாதை களுடன் ராம்நாத் கோவிந்த் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பதிவேட்டில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். 

மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||