‘நீட்’ விவகாரத்தில் நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

'நீட்' விவகாரத்தில் நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தகவல் | நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு தற்காலிக விலக்கு அளிப்பதற்கான நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறி யுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மதுசூதனன், மைத்ரேயன், க.பாண்டியராஜன், செம்மலை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக் குப் பிறகு க.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தபோது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு நிரந்தர விலக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். இருப்பினும் தற்போதைய சூழலில் 2 ஆண்டு களுக்கு தற்காலிக விலக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த அறிவிப்பு வெளியான பிறகு தமிழகத்தில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு பழைய நடைமுறையிலேயே கலந் தாய்வு நடத்தலாம். ராமேசுவரத்தில் வியாழன் அன்று நடைபெறும் அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். நாங்களும் கலந்துகொள்ள உள்ளோம். அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்து பேச உள் ளோம். அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. அதே சமயம் அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு அடுத்த மாதத்துக்குள் நிச்சயம் நல்ல தீர்வு கிடைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.  
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||