‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் பெறக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் பெறக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு | 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'மருத்துவப் படிப்புக்காக நாடு முழுவதும் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அந்த கோப்புகள் தற்போது எங்கு உள்ளது என்பதும் தெரியாமல் உள்ளது. எனவே, 'நீட்' தேர்வுக்கான அந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெறும் நடைமுறைகளை விரைவுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விடுதலை, 'தமிழக அரசு இயற்றியுள்ள சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காததால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளனர். தமிழக சட்டசபையில் இயற்றியுள்ள சட்ட மசோதா ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதமே அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஜனாதிபதி அலுவலகத்தை அது சென்றடையவில்லை' என்று வாதிட்டார். இதை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments