புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவின் 2-வது கூட்டம் சென்னையில் இன்று (5.8.2017) நடக்கிறது

புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவின் 2-வது கூட்டம் சென்னையில் இன்று (5.8.2017) நடக்கிறது | தமிழகத்தில் உள்ள மாநில திட்ட பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இதற்காக புதிய பாடத்திட்டம் தயாரிக்க அமைக்கப்பட்ட முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்தது. இந்த குழு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு குழு கணிதம், அறிவியல் பாடங்கள் குறித்தும், மற்றொரு குழு மொழி மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த இரு குழுக்களும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாக கல்வி கூடத்தில் இன்று (சனிக்கிழமை) கூடுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி செய்து வருகிறார்.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments