பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு: விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு: விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். | பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் www.scan.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாளின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தையும் அங்கேயே பணமாக செலுத்த வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்  DOWNLOAD
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments