தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு தொடங்கியது | 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு தொடங்கியது. முதல் 10 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் சேருவதற்கான ஆணையை சட்டத்துறை செயலாளர் எஸ்.எஸ்.பூவலிங்கம் வழங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி , செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய 10 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 வருட பி.ஏ.எல்.எல்.பி. சட்டபடிப்பில் சேர 1372 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 9 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்தனர். அதில் 360 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக கருதி ரத்து செய்யப்பட்டன. தகுதியான விண்ணப்பங்கள் 9 ஆயிரத்து 144 ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களுக்கு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியல்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நேற்று சென்னை அடையாறு கீரின்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபல்பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. கலந்தாய்வு தொடக்க விழாவில் சட்டத்துறை செயலாளர் எஸ்.எஸ்.பூவலிங்கம் கலந்து கொண்டு சட்டகல்லூரிகளில் முதல் 10 இடங்களை தேர்ந்து எடுத்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிப்பதற்கான ஆணையை வழங்கினார். முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் பெயர்களும் அவர்கள் படிப்பதற்கு தேர்ந்து எடுத்த கல்லூரிகளும் வருமாறு:- 1.பி.சுபாஷினி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டகல்லூரி, 2.எம்.வெற்றிச்செல்வன், கோவை சட்டகல்லூரி, 3.எம்.சங்கீதா, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, 4.பி.பாரத் ஹிதேய், கோவை சட்டக்கல்லூரி, 5.பி.சுசிமிதா, கோவை சட்டக்கல்லூரி, 6.வி.இன்பன்ட் சர்மிளா, கோவை சட்டக்கல்லூரி, 7. ஏ.ஸ்ரீராம் கோவை சட்டக்கல்லூரி, 8.டி.அகிலா சென்னை டாக்டர் அம்பேக்கர் சட்டக்கல்லூரி, 9.கே.கிருபாகரன், மதுரை சட்டக்கல்லூரி, 10. வினோத்குமார், மதுரை சட்டக்கல்லூரி. இன்று(வியாழக்கிழமை) ஆதிதிராவிடர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு 5-ந்தேதி வரை நடக்கிறது.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments