அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக அந்தந்த பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மாணவ-மாணவிகளின் வசதிக்காக அரசு பொதுத்தேர்வு மையம் அந்தந்த பள்ளியிலேயே அமைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக அந்தந்த பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பெரம்பலூர் பாலக்கரை அருகே கலெக்டர் அலுவலக சாலையில் அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக் காக நடத்தப்பட்ட வழிகாட்டி நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா, பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்தார். இதன் விளைவாக பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதமும், மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளின் அலைச்சலை தவிர்க்கவும், காலநேரம் வீணாகுவது, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த பள்ளியிலேயே அரசு பொதுத்தேர்வு எழுத தேர்வு மையம் அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் எத்தகைய போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கேள்வி, பதில்கள் அடங்கிய வினா, விடை புத்தகம் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments