பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார். எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில்கள் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாடு மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த் கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கால்நடை பால்வளம் மற்றும் மீன்வளத்துறை துணை செயலாளரான பழனிசாமி, நகர் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனரான டாக்டர் கே.கோபால் பால்வளம் மற்றும் மீனவளத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அசோக் டேங்ரே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திர ரத்னு வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். மண்ணியல் மற்றும் சுரங்க துறை கமிஷனர் ஆர்.பழனிசாமி, தொழில் கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார். மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும், கூடுதல் கலெக்டருமான ஆர்.ரோகினி, சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனராக மாற்றப்பட்டார். பேரிடர் மேலாண்மை இயக்குனரான ஜி.லதா, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துணைசெயலாளராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொழில்கள் மற்றும் வர்த்தக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். காதி கதர் கிராம வாரிய தலைமை செயல் அதிகாரி சுடலைகண்ணன், எல்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனர் எம்.சுதாதேவி, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தொழில்கள் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.அண்ணாமலை, பூம்புகார் கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். | DOWNLOAD
மேலும் செய்திகளை படிக்க...

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||