Follow by Email

Tuesday, 31 October 2017

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Recommendations of the Official Committee  2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding.  DOWNLOAD

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 30 October 2017

COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலைThe online examination (Preliminary and Main) for the next Common Recruitment Process (CRP) for selection of personnel in Specialist Officers' cadre posts listed below in the Participating Organisations is tentatively scheduled in December 2017/ January 2018.தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையின் ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து தரும் அமைப்பாக வங்கிகள் தேர்வு வாரியம் 'இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்)' செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1315 சிறப்பு அதிகாரி "CRP SPL-VII" பணியிடங்களுக்கான 7-வது எழுத்து தேர்க்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது
மொத்த காலியிடங்கள்: 1315
பணி: சிறப்பு அதிகாரி (Specialist Officer)
பணி மற்றும் காலியிடங்கள்:
1. IT Officers (Scale-I) -120
2. Agricultural Field Officer (Scale-I) - 875
3. Rajbasha Adhikari (Scale-I)    - 30
4. Law Officer (Scale-I) - 60
5. HR/ Personnel Officer - 35
6. Marketing Officer (Scale-I) -195
சிறப்பு அதிகாரி நிரப்பப்பட உள்ள வங்கிகள் விவரம்: அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஐடிபிஐ, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, விஜயா வங்கி
தகுதி: பொறியியல் துறையில் CS, IT, EE மற்றும் ECE, Agricultural,  Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம் பெற்று பதிவு செய்திருப்பவர்கள், எச்ஆர், சந்தையியல் துறையில் எம்பிஏ  முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.11.2017 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: வங்கிகள் தேர்வு வாரியத்தால் (ஐபிபிஎஸ்) நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து 'அப்ஜெக்டிவ்' முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அதிகாரப்பூர்வ www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எதிர்கால பயன்பாட்டிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி: 07.11.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2017
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.12.2017 மற்றும் 31.12.2017
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.1.2018
மேலும் முழுமையான விவரங்களை http://www.ibps.in/wp-content/uploads/IBPS_CRP_SPL_VII_Detail_Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். DOWNLOAD

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 29 October 2017

ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் | ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை 'செனட்' கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் 'செனட்' கூட்டம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் பேராசிரியர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். 4 பேராசிரியர் ஜெகநாதன், புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, துணை வேந்தர் துரைசாமி பேசியதாவது:- நாட்டிலேயே காகிதம் இல்லா பரிவர்த்தனை செய்யும் ஒரே பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயர் பெற்று இருக்கிறது. தேசிய கல்வி களஞ்சியம் மூலம் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்படும். பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மாணவர்கள் சென்று படிக்க ஊக்கப்படுத்த விரும்புகிறோம். எம்.பில், பி.எச்.டி. படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு பி.எச்.டி. சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்-லைனில் வழங்குதல், பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடுதல், பல்கலைக்கழக மானியக்குழு எம்.பில், பி.எச்.டி. விதிமுறைகளை (2016) பின்பற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதுகலை படிப்புகளில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தரமணியில் உள்ள மாணவர் விடுதி, மாணவிகள் விடுதியாக மாற்றி திறந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, துணை வேந்தர் துரைசாமி, ஆய்வு கட்டுரைகள் மற்றும் மதிப்பீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக விதிமுறைப்படி, ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரை மதிப்பீடு செய்வதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 2 பதிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் ஒருவருக்குத்தான் அவர் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றும் என்று தெரிவித்தார். இதற்கு செனட் உறுப்பினர்கள் காந்திராஜ், மணிவாசகம், அனுராதா உள்பட பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக துணைவேந்தர், பாடத்திட்டக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிடுவதாக தெரிவித்தார்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய்? எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம்? கப்பலோட்டிய தமிழன் யார்? நம்முடைய சுதந்திர தினம் எது? தேசிய சின்னம், பறவை, மரம் எது? என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்'' என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ''இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல். எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம். இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்'' என்றார். | ஆர்.பாலசரவணக்குமார்



LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 October 2017

New Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

New Version of Simple Calculator_7.3 | Special features: with 1. Entry page is separately now 2. Simplified for user friendly. 3. Two incentives are calculated yearwise now available. 4.old CCA,PP are automatically calculated. Plz upload this calculator. Thank you very much. Yours, M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil., Computer Instructor, Govt. Boys Hr. Sec. School Mariammankoil, Tanjavur District-613 501. Cell: 98 43 47 0024. email: mtamilmca@yahoo.com DOWNLOAD

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 October 2017

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு


தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு | தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE