பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1315 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு 1315 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை .பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1315 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (.பீ.பி.எஸ்.)' அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இந்த தேர்வை அனுமதிக்கும் பொதுத்துறை வங்கிகளின் பணியிடங்களில் அந்த மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம்.தற்போது .பீ.பி.எஸ். அமைப்பு 7-வது சிறப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்கேல்-1 தரத்திலான 1315 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் வருமாறு: .டி. ஆபீசர் - 120 பேர், அக்ரிகல்சரல் பீல்டு ஆபீசர் - 875 பேர், ராஷ்டிரபாஷா அதிகாரி - 30 பேர், சட்ட அதிகாரி - 60 பேர், சட்ட அதிகாரி, எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி - 35 பேர், மார்க்கெட்டிங் அதிகாரி - 195 பேர்.21 பொதுத்துறை வங்கிகள் இந்த எழுத்து தேர்வின் மூலம் தங்கள் நிறுவன பணியிடங்களை நிரப்புகின்றன. இதர வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த தேர்வு முடிவை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே விருப்பமானவர்கள் தேர்வை எழுதி பயன் பெறலாம்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-11-2017 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-11-1987 மற்றும் 1-11-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ்-டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ்-கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவு படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் .டி. அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்., அக்ரி கல்சர், ஹார்ட்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங், பிஸ்ஸரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் கோ ஆபரேசன், கோ ஆபரேசன் அன்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பட்டப்படிப்புகளை படித்தவர்கள் அக்ரிகல்சர் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ராஷ்டிர பாஷா அதிகாரி பணிக்கும், இதேபோல சட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அது சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும்.
கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கியத் தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 7-11-2017
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 27-11-2017
முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாட்கள் : 30-12-2017, 31-12-2017
முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : பிப்ரவரி 2018
நேர்காணல் நடைபெறும் காலம் : பிப்ரவரி 2018
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||