இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 பணிகள் | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்திய எண்ணெய் கழக நிறுவனம் சுருக்கமாக ..சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இதன் சுத்திகரிப்பு ஆலைகளில் பாய்லர் ஆபரேசன் என்ஜினீயர், குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர், பயர் அண்ட் சேப்டி ஆபீசர், மெடிக்கல் ஆபீசர், ஹியூமன் ரிசோர்ஸ் ஆபீசர், அசிஸ்டன்ட் இந்தி ஆபீசர், மிட் லெவல் என்ஜினீயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக எச்.ஆர். பிரிவில் 50 பணியிடங்களும், பயர் அண்ட் சேப்டி ஆபீசர் பிரிவில் 50 இடங்களும், குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர் பிரிவில் 44 இடங்களும், பாய்லர் ஆபரேஷன் என்ஜினீயர் பிரிவில் 33 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர மருத்துவ அதிகாரி பணிக்கு 19 பேரும், அசிஸ்டன்ட் இந்தி ஆபீசர் பணிக்கு 19 பேரும், மேலாளர் பணிக்கு 6 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு:-
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 31-10-2017 தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
பி.., பி.டெக் பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. எம்.. இந்தி, எம்.பி.., எச்.ஆர்., எம்.பி.பி.எஸ். படிப்புடன் எம்.டி. படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, அனுபவ விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர் காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சில பணிகளுக்கு நேர்காணல் மட்டும் நடைபெறும். சில பணிகளுக்கு குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். 18-11-2017-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.இதற்கான எழுத்துத் தேர்வு 10-12-2017 அன்று நடைபெற உள்ளது. இது பற்றிய விரிவான www.iocl.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||