Follow by Email

Sunday, 31 December 2017

G.O.Ms.No.1294 Dated: 27.10.77 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை.



G.O.Ms.No.1294 Dated: 27.10.77. - Service Associations – Special Casual Leave – Eligibility to Office bearers of Recognised Service Association – Guidelines – Fixed. ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை Courtesy : வெ. ரமேஷ்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.NO.229, 22nd JANUARY 1974 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை


G.O.NO.229, 22nd JANUARY 1974 - Service Associations – Recognition by Government – Statutory Rules regarding Recognition of Associations – Issued.ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை Courtesy : வெ. ரமேஷ்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்



புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார் புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியப்பணியில் 31 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாகத்திகழும் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரியாக சிறப்புடன் பணியாற்ற, சிவகங்கை மாவட்டக்கல்வி அதிகாரி மாணிக்கம்,துணை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள தமிழ்ச்செல்வன்,முன்னாள் மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரமசிவம்,சண்முகம்,தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் பீட்டர் ராஜா,அருள் சுந்தரராஜ்,திராவிடச்செல்வம்,மணவாளன்,சேகர் ஆகியோரும், பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும்,ஆசிரியர்கள், DIET முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் வாழ்த்தினார்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018



TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |  RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 December 2017

TNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.


TNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள். DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 December 2017

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம்-மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு.


ஆந்திரா நடைமுறையைப் பின்பற்ற முடிவு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு | அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரவும், ஆந்திராவில் இருப்பதைப் போன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது. தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர் எனில் பிளஸ் 2 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி) வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிளஸ் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வுகளில் மதிப் பெண் குறைந்த அளவே வழங்கப்பட்டதால், வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டும் என்றும், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தகுதித் தேர்வில் தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தினால் வேலையில் சேர்ந்துவிட்டதாகவும், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பிளஸ் 2 மதிப்பெண் குறைவாக இருந்த காரணத்தினால் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இந்த நிலையில், வெயிட்டேஜ் முறையில் உள்ள பாதிப்புகளை ஆராய்ந்து குறைகளைச் சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் வித்தியாசமாக இருக்கிறது. அங்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன் னொரு போட்டித் தேர்வு நடத்து கிறார்கள். இறுதியாக, தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 20 சதவீதமும், போட்டித்தேர்வுக்கு 80 சதவீதமும் வெயிட் டேஜ் அளிக்கப்படுகிறது. முந் தைய தேர்வுகளான பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட், இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுவதே இல்லை. அங்கு பின்பற்றப்படும் வெயிட் டேஜ் முறையால் எந்த தேர்வர் களுக்கும் பாதிப்பு இல்லை. ஆந்திராவில் பின்பற்றப்படும் பணிநியமன நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படுமா என்று தமிழக அரசு அமைத்துள்ள குழு உறுப்பினர்களிடம் கேட்டபோது, "தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னொரு போட்டித்தேர்வு நடத்தி அந்த வெயிட் டேஜ் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் ஆந்திர நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இதனால், தற்போதை வெயிட் டேஜ் முறைக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வராது. தகுதித் தேர்வு மதிப்பெண், எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் அமைவதால், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும் கவலைப்படத் தேவையில்லை. எனவே, ஆந்திர தேர்வுமுறையை தமிழகத்தில் நடை முறைப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தனர்.ஜெ.கு.லிஸ்பன் குமார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 21 December 2017

BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD


  1. BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். DOWNLOAD
  2. BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC - ORAL TEST FOR THE POST OF ASST. DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE | TNPSC நேர்காணல் தேர்வு 04.01.2018 தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.


TNPSC - ORAL TEST FOR THE POST OF ASST. DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE | தமிழ்நாடு தொழில் மற்றும் வணிக உதவி இயக்குநர் (தொழில் கூட்டுறவு) பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.07.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 1035 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 12 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு 04.01.2018 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Written Examination for the post of Assistant Director of Industries and Commerce (Industrial Co-operatives) in the Tamil Nadu Industries Service was held on 16.07.2017 FN & AN. Totally 1035 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 12 candidates those who have been provisionally admitted to Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Oral Test will be held on 04.01.2018 at the Commission's office.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4 ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி 13.12.2017 வரை 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. பின்னர் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலின் பாதிப்பு காரணமாக கடைசி தேதி 20.12.2017 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடைசி நாளான 20.12.2017 அன்று வரை 20.83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் கூடுதலாக 9,040 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு 11.34 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும், 9.48 லட்சம் ஆண் விண்ணப்பதாரர்களும் 54 மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் தேர்வுக்கட்டணத்தை இன்று (21.12.2017) நள்ளிரவு வரை ஆன்லைனில் (Online) செலுத்தலாம். விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் "APPLICATION STATUS" என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in ல் உள்ளன.

|

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.


(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும்? மற் றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமா?என்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் உயர்கல்வி துறை வழங்கிய பதில்கள்.
கோரிய விவரங்கள்: 
(i) பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) சுற்றறிக்கை அறிவிப்பு எண்: No.F.1-2/2016(PS/Amendment) நாள்: 11th July, 2016 படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் படி ஜூலை 11, 2009 க்கு அடுத்து முனைவர் பட்டம் (Ph.D) பயில பதிவு செய்தவர்கள் கட்டாயமாக தேசிய அல்லது மாநில அளவிலான உதவி பேராசிரியருக்கான தகுதி (நெட்/செட்) தேர்வினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது முனைவர் பட்டம் பெற்றாலும் நெட்/செட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறவேண்டும் அல்லது முதுகலை பட்ட படிப்பு (M.A/M.Sc/M.Com) உடன் நெட்/செட் தகுதி இருந்தால் போதும் என்று யுஜிசி (UGC) கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணி நியமணம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது தமிழகத்தில் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? அல்லது எப்பொழுது கட்டாயமாக்கப்படும்? ஒரு சமயம் தாங்கள் இந்த தகவலை தெரிவிக்க இயலாது என்றால், யாரிடம் இதனை கேட்பது. 
(ii) பல்கலைக்கழக மானிய குழுவானது முழு நேரம் முறையில் (Full-Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் (Research Experience) நாட்களை கற்பித்தல் அனுபவமாக (Teaching Experience) கருத்தில் கொள்கிறது. இந்த நடைமுறை தமிழகத்திலும் உள்ளதா? இந்த கணக்கீடானது உதவி பேராசிரியர் (Assistant Professor) நேர்காணலின் போது பொருந்துமா அல்லது இணை பேராசிரியர் (Associate Professor) நேர்காணலின் போது பொருந்துமா?
கடித எண் 19648/எப்.2/2017-1 நாள் 13.12.2017 வாயிலாக பெறப்பட்ட பதில்கள்  
(i) அரசு கடித எண்.13792/எப்.2/2017-10 நாள். 13.01.2017 -ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் தெரிவு செய்வது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உரிய அறிவுறுத்துங்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ii) முழு நேரமுறையில் (Full Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக எடுத்துக் கொள்வது குறித்து தமிழக அரசால் தனியே ஆணைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. DOWNLOAD  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு


திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி. படித்தவர்களுக்கு அரசு பணிகள், பதவி உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10-ம் வகுப்பு, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 18 December 2017

‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு ஒரு மதிப்பெண் நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு கணக்கெடுக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்



'வந்தே மாதரம்' தொடர்பான கேள்விக்கு ஒரு மதிப்பெண் நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு கணக்கெடுக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம் | 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 'வந்தே மாதரம்' தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது. இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், 'வந்தே மாதரம்' முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் 'வந்தே மாதரம்' பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவு தேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, "வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்று பதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.| 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 'வந்தே மாதரம்' தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது. இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், 'வந்தே மாதரம்' முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் 'வந்தே மாதரம்' பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவு தேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, "வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்று பதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.ஜெ.கு.லிஸ்பன் குமார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 17 December 2017

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் B.Ed பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில்


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் BEd பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில் | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பி.எட் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை. மேலும் 50000 மேற்பட்டோர் பி.எட் கணினி அறிவியல் படித்து வேலை இல்லாமல் இருப்பதால் இப்பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில்அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை அளித்த பதிவாளர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு. நன்றி. S.புருஷோத்தமன்.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 15 December 2017

TNPSC - GROUP IV SERVICES & VAO - EXTENSION OF DATES FOR SUBMISSION OF ONLINE APPLICATION - தொகுதி – 4 – விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு



TNPSC - Group IV services & VAO - Extension of dates for submission of online application - தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு | தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018ம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும் , குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018 ல் எவ்வித மாற்றமுல் இல்லை | STUDY MATERIAL DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம்


ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம் | பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில்பணியாற்றுகின்றனர். இவர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஆசிரியர்களாக பணியிட மாற்றம் வழங்க, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 350 ஆசிரியர்கள் பாடவாரியாக, மாவட்டம் விட்டு மாவட்டம்; ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றப்பட உள்ளனர். இதற்கான வழிகாட்டுதலை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், வழங்கி உள்ளார். DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு


புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும் கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .. நாள்:07/01/2018 காலை 9மணி அளவில். இடம்:ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள "மல்லிகை அரங்கம்" வ.உ.சி பூங்கா செல்லும் வழி. ஈரோடு மாவட்டம். """இன்றைய ஏழை மாணவர்கள் தான் நாளைய -கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை"" . தமிழாக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்த விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர் ஈரோடு நோக்கி,, திரு வெ.குமரேசன்,9626545446, 9789180422 மாநிலப் பொதுச்செயலாளர் , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 11 December 2017

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு


தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு | தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் வழங்கும் புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் அறிமுகப்படுத்த தொழில்நுட்பக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) மற்றும் கணக்கியல் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. கீழ்நிலை, மேல்நிலை, அதிவேகம் என வெவ்வேறு நிலைகளில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, ஆகஸ்டு) நடைபெறும் இத்தேர்வுகளில் சுமார் 3 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அரசு வேலையில் சேர மட்டுமின்றி பொதுவான அரசுப் பணிகளுக்கு இவை கூடுதல் மற்றும் விரும்பத்தக்க தகுதிகளாக கருதப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, தற்போது தட்டச்சு படிக்கும் ஆர்வம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரம் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வெழுதும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு மற்றும் டிப்ளமா, பல்கலைக்கழக தேர்வுகளைப் போன்று விடைத்தாள் நகல் பெற முடியாது. மறுமதிப்பீடும் செய்ய இயலாது. (எஸ்எஸ்எல்சி தேர்வில் விடைத்தாள் நகல் பெறலாம்.மறுகூட்டல் செய்யலாம். ஆனால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது) தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மற்ற தேர்வுகளைப் போன்று விடைத்தாள் நகல் வழங்க வேண்டும், மறுமதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளில், விடைத்தாள் நகல் வழங்கும் முறை மற்றும் மறுமதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் பிறப்பித்துள்ளார். விடைத்தாள் நகல் பெற ரூ.150-ம், தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) தேர்வில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ரூ.400-ம், சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) மற்றும் கணக்கியல் தேர்வு மறுமதிப்பீட்டுக்கு ரூ.500-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறையானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத் தேர்விலிருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆர்.பழனிசாமி தெரிவித்தார். இதன்மூலம் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைப் பெற முடிவதுடன் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். மேலும், தங்கள் விடைத்தாள்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன? மதிப்பீட்டில் ஏதேனும் தவறுகள் நேர்ந்துள்ளனவா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள முடிவதுடன் குறைகள் இருந்தால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி அடையவும், கிரேடுகளை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு



மத்திய அரசு பணியில் சேர ஆசையா? | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மத்திய அரசுத் துறையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஆண்டு தோறும் கணிசமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி உயர்நிலைக் கல்வி (பிளஸ்-2) தரத்திலான தேர்வு மூலம், மத்திய அரசுத்துறைகளில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ஸ்டாப் செலக்சன் கமிஷன், சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு துறையில் இளநிலை உதவியாளர், அஞ்சலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு 3 ஆயிரத்து 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1-8-2018 தேதியில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு பணித்திறன் தேர்வும் நடத்தப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், வருகிற 18-12-2017-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பிக்கும்போது ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இளையதளம் வழியாகவும், ஸ்டேட் வங்கி வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 4 முதல் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. விரிவான விவரங்களை www.ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.



தமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிரப்பி வருகிறது. தற்போது வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 130 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 30 இடங்களும், தோட்டக்கலை உதவி இயக்குனர் பணிக்கு 100 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிஎச்.டி. படித்தவர்கள் 32 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி., பி.சி.எம்., பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. கல்வித்தகுதி: தோட்டக்கலை தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரிக்கு தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-12-2017-ந்தேதியாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்


ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப் படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 படித்த பெண்களை, நர்சிங் பயிற்சி அளித்து ராணுவப் பணியில் அமர்த்திக் கொள்ளும் 'பி.எஸ்சி. நர்சிங் கோர்ஸ்-2018' பயிற்சி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்பவர்கள், 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுடன் அதற்கான சான்றிதழ் பெறலாம். அத்துடன், ராணுவ பணி வாய்ப்பையும் பெற முடியும். இந்திய குடியுரிமை பெற்ற திரு மணமாகாத இளம் பெண்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேரலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரத்தை இனி பார்க்கலாம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-10-1993 மற்றும் 30-9-2001-ந் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பிளஸ்-2 படிப்பை முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியியல், பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 4 ஆண்டு காலம் நர்சிங் பயிற்சி பெற்ற பின், பணி நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். இது பற்றிய விவரங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்


இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரெயில்வே. தற்போது ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 1785 பேரும், தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் 1050 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர மத்திய மண்டலத்தில் அப்ரண்டிஸ் அல்லாத அலுவலக பணிகளுக்கும் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மண்டலத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின்படி 20 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விவரங்களை அறிவோம்... தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள 1785 பணியிடங்களில் காரக்பூர் பணிமனைக்கு 360 பேரும், கேரேஜ் பிரிவில் 121 பேரும், என்ஜினீயரிங் ஒர்க்‌ஷாப் பிரிவில் 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிக்னல் டெலிகாம் ஒர்க்‌ஷாப், டிராக் மெஷின், டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக் லோகோ ஷெட், கேரேஜ் வேகன் டெப்போ, டி.இ.இ., எஸ்.எஸ்.இ. போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 1-1-2018 தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படு கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 2-1-2018-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை www.ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் பிலாஸ்பூர் பிராந்தியத்தில் 432 பேரும், நாக்பூர் பிராந்தியத்தில் 313 பேரும், ராய்ப்பூர் பகுதியில் 305 பேரும் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். மெக்கானிக், ஸ்டெனோகிராபர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், வெல்டர், பிளம்பர், மாசன், பெயிண்டர், கார்பெண்டர், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், சர்வேயர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10,12-ம் வகுப்பு படித்து, பணியிடங்கள் சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-12-2017-ந் தேதியாகும். அப்ரண்டிஸ் பயிற்சி அல்லாமல் மும்பையை தலைமை இடமாக கொண்ட மத்திய ரெயில்வே மண்டலத்தில் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு 150 பேரும், கூட்ஸ் கார்டு பணிக்கு 125 பேரும், தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படித்திருப்பதுடன், குறிப்பிட்ட வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு, தட்டச்சு திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் கூட்ஸ் கார்டு பணிக்கு பட்டப்படிப்பு படித்த, 42 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவர்கள் www.rrccr.com என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதேபோல தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 20 பேருக்கு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்து, விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெயில்வே பணியைப் பெறலாம். இது பற்றிய விவரங்களை www.rrcmas.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18-12-2017-ந் தேதி கடைசி நாளாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 9 December 2017

MARCH 2018-HSC-PRIVATE NOTIFICATION | மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



பிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிசம்பர் 11 முதல் 16 வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (சேவை மையங்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது). இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அபராத கட்டணத்துடன் டிசம்பர் 18 முதல் 20 வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். 2016 ஜூன், ஜூலை பருவம் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் எஸ்எஸ்எல்சி முழுமையாக தேர்ச்சிப்பெற்று 2 ஆண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நேரடி தனித்தேர்வர்களாக எழுத முடியும். இதுவே, அவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 3 December 2017

FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்? உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா? அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா? ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்? அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள். www.findteacherpost.com க்கு ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 24 மாதங்களில் 43000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 4000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed., படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும். ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம். இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment) செய்து கொள்ளவும். ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும் இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும் உடனே பதிவு செய்யவும் 
இச்சேவை முற்றிலும் இலவசம் 
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம். தற்போதைய காலிபணியிடங்கள்:
DISTRICT
with interview date
NAME OF THE SCHOOL
VACANCY STATUS
CONTACT
LINK
SUBJECT
LEVEL
DESIGNATION
URL – ID
SALARY

Dharmapuri
3.12.2017
Sri Vidya Mandir M.H.S.S
English
Middle
Teacher
https://www.findteacherpost.com/schools/sri-vidya-mandir-matric-hrsecschool-s280
20 to 25


History
Middle
Teacher

20 to 25



Botany
Middle
Teacher

20 to 25



Zoology
Middle
Teacher

20 to 25









Erode
5.12.2017
Sri Maruthi Vidya Bhavan Matric.schl
Maths
Primary
Teacher
https://www.findteacherpost.com/schools/sri-maruthi-vidhya-bhavan-matriculation-school-s320
5 to 10
















Namakkal

8.12.2017
Vetri Vikaas Public school
Chemistry
Middle
Teacher
https://www.findteacherpost.com/schools/vetri-vikaas-public-school-s362
10 to 15
















Ramnat
3.12.2017
Sri kanna Matric.schl
Physics
High
Teacher
https://www.findteacherpost.com/schools/sri-kanna-matriculation-school-s285
10 to 15


Chemistry
High
Teacher

10 to 15

















Theni

4.12.2017

Bhrathi Vidya Mandir M.h.s.s
Zoology
Hr.Sec
Teacher
https://www.findteacherpost.com/schools/bharathi-vidya-mandir-matric-hrsecschool-s145
15 to 20








Ariyalur
4.12.2017
NR Public School
Maths
Middle
Teacher
https://www.findteacherpost.com/schools/nr-public-school-s359
10 to 15


Physics
Middle
Teacher

10 to 15



Chemistry
Middle
Teacher

10 to 15



English
Middle
Teacher

10 to 15



Micro biology
Middle
Teacher

10 to 15









Tiruppur

15.12.2017
Gnanasambandar M.H.S.S
Maths
Hr.Sec
Teacher
https://www.findteacherpost.com/schools/gnanasambandar-matric-higher-secondary-school-s199
10 to 15
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts