தொடக்க கல்வி பட்டய தேர்வு -16.02.2018 முதல் 20.02.2018 வரை விடைத்தாள் நகல்...

தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தொடக்க கல்வி பட்டய தேர்வு ஆசிரியர் படிப்பை முடித்து, தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், விடைத்தாள் நகல் கேட்டு, ஜன., 22 முதல், 25 வரை விண்ணப்பித்தனர்.அவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை,scan.tndge.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி வரை, விடைத்தாள் நகலை பிரதி எடுக்க, அவகாசம் அளிக்கப்படும்.நகல் பெற்றவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, அதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பிரதி எடுக்க வேண்டும்.அதில், கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், வரும், 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||