செய்தி துளிகள்

 • முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன். 9 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.
 • பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.
 • அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து தேர்வுகளும் முடிந்ததால், ஏப்ரல் 21ம்தேதி முதல் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 • விடைத்தாள் திருத்தும் பணியின் போது ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 • நகர்புறங்களில் 30 க்கு குறைவாகவும் ,கிராமப்புறங்களில் 15க்கு குறைவாகவும் உள்ள மேல் நிலைப்பள்ளிகளைஉடனடியாக மூட பள்ளிக்கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அதிரடி உத்தரவு.
 • குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.
 • மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று(ஏப்.,30, திங்கள் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதத்தில் மே 12ம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 26 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
 • மெரினா, மதுரை உட்பட, தமிழகத்தின், ஐந்து இடங்களில், இலவச, 'அம்மா வை பை' வசதி, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
 • பாலிடெக்னிக் தேர்வு விரைவில் நடத்தப்படும்.பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்தாண்டு கலந்தாய்வு நடைபெறும்.மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை போல் வண்ண சீருடை வழங்கப்படும்.
 • 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிடையாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய ஆசிரியர் நியமனங்களும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 • பிளஸ் 1 வணிகவியல் பொதுத்தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 1 பொதுத் தேர்வில் கலைப்பிரிவு மாணவர்களுக்கு பிரதான தேர்வுகளில் முதலாவதாக வணிகவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 • லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.
 • 05-04-2018 க்குள் CCE சார்பான அனைத்து பதிவேடுகளும் முடிக்கப்பட்ட வேண்டும்- DEEO உத்தரவு
 • IGNOU - B.Ed 2018 Second Phase Merit List Published
 • திருமணத்தை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்களுக்கு தமிழக அரசு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 • கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 • அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 • இந்தியாவின் முன்னணி 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் பணியகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையில், ‘இந்தியா முழுவதும் 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 • கணிதத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 • தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.
 • 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 • தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  
 • காலியாக உள்ள 325 உதவி பொறியாளர் பணியிடங்கள் மின்வாரிய தேர்வுக்கு 80,000 பேர் விண்ணப்பம்
 • பிளஸ்-1 தேர்வு தமிழ் முதல் தாளுடன் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தமிழ் 2-வது தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் கேட்டதற்கு அவர்கள் 3 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகள் உள்பட மற்ற கேள்விகள் எளிதாக இருந்தன என்று கூறினார்கள்.
 • சட்டப் பேரவையில் 2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ல் தாக்கல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் | தமிழக அரசின் 2018-19 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் மார்ச் 15-ம் தேதி துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக் கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி 8-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது முதல் உரையை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 4 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தது. 
 • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி கூடுதலாக 2 சதவீதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வாக நடைபெற்றது. முதல் நாளாக தமிழ் முதல் தாள் நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, தமிழ் முதல் தாளில் 1 மதிப்பெண் கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டன. அதனால் அந்தக் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. மற்ற வினாக்கள் எளிதாகத்தான் இருந்தன என்றனர்.
 • மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம்கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது.
 • பிஎட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் .தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஎட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
 • பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும்மாணவர்களின்பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 • கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூகசேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 • பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாகவே இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
 • 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும்.
 • இன்று வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர கால அட்டவணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
 • விடைத்தாள் திருத்துவது +2 தேர்வுக்கு மொழிப்பாடத்திற்கு 11.04.18முதல் 02.05.18 வரை மற்றும் பிற பாடங்களுக்கு 12.04.18 முதல் 25.04.18 வரை +1 தேர்வுக்கு மொழி பாடத்திற்கு 04.05.18 முதல் 19.05.18 வரை மேலும் 27.04.18 முதல் 09.05.18 வரை
 • சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரும் 2018-19 கல்வியாண்டு முதல் ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 
 • வரும் 2018-19-ம் கல்வியாண்டில் முதல் வகுப்பு, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளின் பாடப்புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான புத்தக தயாரிப்புப் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 9-ம் வகுப்புக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களின் முதல் பாகம் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. இதை சி.டி (குறுந்தகடு) வடிவில் தயாரித்து, அச்சிடும் பணிக்காக கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். 
 • தமிழகத்தில் 19 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு தலா 2,500 ரூபாய் மதிப்பிலான குக்கர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு குறைவாக சத்துணவு அருந்தும் 19 ஆயிரம் மையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் இவை வழங்கப்படும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 • SET 2018 - மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு(செட்) விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்க்கல்வித் துறை செயலர், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 • மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவை முன்னிட்டுகன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச்-13ஆம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 • 2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
 • TET : இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
 • தனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது 
 • பள்ளிக்கல்வி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மாணவர்களுடன் 16.02.2018 அன்று பாரத பிரதமர் கலந்துரையாடல் குறித்து  பள்ளிக்கல்வி  இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
 • Directorate of Government Examinations - March / April 2018 SSLC Exam Hall Ticket Download for Private Candidates - www.dge.tn.gov.in
 • இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. 
 • அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தால் ரூ 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 • MINISTRY OF FINANACE (INCOMETAX): CONVEYANCE ALLOWANCE RS.1600 P.M CAN BE EXEMPTED FOR TAX CALCULATION!!!
 • அரசு பள்ளிக்கூட சீருடைகள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு வருகிற கல்வி ஆண்டில்(2018-2019) மாற்றப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்தில் சீருடைகளும், 6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மற்றொரு நிறத்திலும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வேறு ஒரு நிறத்திலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்-மாணவிகளுக்கு இன்னொரு நிற சீருடைகளும் என்று 4 வகையாகமாற்றப்பட உள்ளது. 
 • பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கி, ஏப்., 20ல் முடிகிறது.
 • பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி!!!
 • பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
 •  கடந்த வாரம், அண்ணா பல்கலைக்கழகம் 2017-2018ஆம் கல்வியாண்டின்
 • பொறியியல் மாணவர்களுக்கான தேர்ச்சிப் பட்டியலை வெளியிட்டது. தமிழ்நாட்டில் 43 பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவர்கூட முதல் செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
 • சென்னையில் 16ம் தேதி உயர்கல்வித்துறை அவசரக்கூட்டம் . துணைவேந்தர்கள் கலந்துக்கொள்ள உத்தரவு.


Comments