கலை - அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்

கலை - அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல் | தற்போது பொறியியல் பட்டதாரிகளைக் காட்டிலும் கலை அறிவியல் பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பு அதிகம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் 44-வது பட்டமளிப்பு விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஆர்.பிரபாகரன் தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பி.துரை சாமி முன்னிலை வகித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை யும் சான்றிதழ்களையும் வழங்கினார். இளங்கலை, முதுகலை, எம்பில் ஆகிய படிப்புகளில் 1,026 பேர் பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சரும், துணைவேந்தரும் பதக்கங்களையும் பரிசுகளையும் வழங்கினர். முன்னதாக, அமைச்சர் அன்பழகன் பட்டமளிப்பு விழா உரையாற்றிய போது கூறியதாவது: அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை 2016-17-ன் படி இந்தியாவில் உயர்கல்வியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள்தான் இந்த பெருமைக்கு காரணம். அவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல்வ ராக இருந்தபோது, 65 புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். மேலும், கலை அறிவி யல் கல்லூரிகளில் 961 புதிய படிப்புகளையும் ஆரம்பித்தார். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாட்டில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 46.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தற்போது தனியார் நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரிகளை விட கலை அறிவியல் பட்டதாரிகளையே அதிகளவில் வேலைக்குத் தேர்வுசெய்கின்றன. இதனால், கலை அறிவியல் பட்டதாரிகளுக்கு தற்போது வேலைவாய்ப்பு அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments