வரும் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர் வருகை பயோமெட்ரிக் முறை

வரும் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர் வருகை பயோமெட்ரிக் முறையிலும்,மாணவர்கள் வருகைப்பதிவு புதிதாக வெளியிடப்பட்ட செயலி மூலமாகவும் நடைமுறைப்படுத்தப் பட இருப்பதால் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கேற்ப தங்களது பள்ளி நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் புதிய பாடத்திட்டத்திற்கான பணியிடைப் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத கோடைவிடுமுறை நாட்களில் நடத்திட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும்,புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் முதல்வரின் ஒப்புதல் பெற்ற உடன் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

Comments