ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வுகால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ம்தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது. துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணிவரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம்வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

Comments

This comment has been removed by the author.