TNPSC - LAB ASSISTANT EXAM. HALL TICKET DOWNLOAD

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 02/2018 நாள். 25.01.2018-ன்படி 56 பணியிடங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர் (Forensic Science Department) பதவிக்கான எழுத்துத்தேர்வு 06.05.2018 அன்று முற்பகல் மட்டும் சென்னை உட்பட 8 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள தகுதியான விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். | The Commission has issued Notification No.02/2018 dated: 25.01.2018, for the Written Examination for 56 vacancies in the post of Laboratory Assistant in Forensic Science Department for the year 2016-2018 in the Tamil Nadu Forensic Science Subordinate Service. The examination which is scheduled to be held on 06.05.2018 FN at 8 district centres including Chennai. The Memo of admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission's website (www.tnpsc.gov.in and www.tnpscexams.net). If there is any doubt in downloading Hall Ticket, the candidate may got clarified from the Commission's e-mail ID contacttnpsc@gmail.com or the Commission's Grievance Cell toll free number 1800 425 1002.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 10 பிரிவுகள் உள்ளன. இது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இந்த பாடப்பிரிவுகளில் 1,020 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டு சட்டப்படி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை-2018 ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் சேர்த்து நடத்த வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். அதை அரசு நன்கு பரிசீலனை செய்து என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்த இந்த கல்வியாண்டு (2018-2019) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் இனி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த இருக்கிறது.

தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் DOWNLOAD.

தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் - DOWNLOAD. | DOWNLOAD | DOWNLOAD

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது.முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது | பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர்செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் - உயர்கல்வித்துதறை

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துதறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக கலந்தாய்வு நடந்தது.

பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் : பிளஸ் 2 முடித்த, கணிதம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரி களில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இது, நடப்பாண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிகிறது. 'சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கும். 'ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை, ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்' என, தமிழக, இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.விண்ணப்ப பதிவு : எந்த பிரிவு மாணவர்களுக்கு, எப்போது, ஆன்லைன் கவுன்சிலிங்: அதன் விதிகள் என்ன; விண்ணப்ப பதிவு எப்படி என்பது போன்ற விதிமுறைகள்,அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மற்றும், https://tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNUSRB - POLICE EXAM 2018 - CUTOFF MARKS DETAILS



8.55 சதவீத பிஎப் வட்டிக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்

வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் உள்ள பிஎப் தொகைக்கு 8.55 % வட்டி வழங்க இபிஎப்ஓ அறங்காவலர் குழு முடிவெடுத்தது. அறங்காவலர் குழு முடிவெடுத்தாலும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் இந்த வட்டி தொகை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த ஐந்தாண்டுகளில் மிக குறைந்த பிஎப் விகிதம் இதுவாகும். 2013-14 மற்றும் 2014-15-ம் நிதி ஆண்டுகளில் 8.75 சதவீத வட்டி வழங்கப்பட்டது. 2015-16-ம் நிதி ஆண்டில் 8.8 சதவீதமும், 2016-17-ம் ஆண்டில் 8.65 % வட்டியும் வழங்கப்பட்டது. தற்போது 8.55 % வட்டி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் வட்டி விகிதத்தை அறிவித்தார். இருந்தாலும் மற்ற அனைத்து சிறு சேமிப்பு விகிதங்களுடன் ஒப்பிடும் போது பிஎப் மீதான வட்டி அதிகமாகும். இந்த வட்டி விகிதத்துக்கு நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டிருந்தாலும் சில கேள்விகளையும் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎப் முதலீடுகளில் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் அந்தத் தவறில் இருந்து தற்காத்துக் கொள்ள கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இதனை பிஎப் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இதுவரை பிஎப் அமைப்பு நஷ்டத்தை சந்தித்ததில்லை அதனால் கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை என பிஎப் அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திறந்தநிலை கல்வி நிறுவன பிளஸ் 2 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத அனுமதி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
திறந்தநிலை கல்வி நிறுவன பிளஸ் 2 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத அனுமதி இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள், நீட் தேர்வு எழுதலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித் துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கிறது. தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் (National Institute of Open Schooling - NIOS), மாநில அரசுகள் நடத்தும் திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ் 2 படிப்பவர்கள், பள்ளிக்குச் செல்லாமல் படிக்கின்றனர். அவர்களுக்கு செய்முறைத் தேர்வு இல்லை. அந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு எழுத அனுமதித்த இந்திய மருத்துவக் கவுன்சில், இந்த ஆண்டு அனுமதி இல்லையென்று கூறியதால், நாடுமுழுவதும் பிளஸ் 2 படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றம் உத்தரவு இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை, இந்த முடிவினை பரிசீலனை செய்யும்படி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது. மாணவர்கள் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த மாணவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதால், நீட் தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையில் மாணவர்கள் இருந்தனர். இந்நிலையில் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம். ஆனால், மாணவர் சேர்க்கை என்பது நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம் சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச் சங்கம் சார்பில் ‘தமிழ்நாடு பள்ளிக் கல்வித் திட்ட உருவாக்கம்’ மாநில சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் இயக்குநர் க.அறிவொளி, மாணவர் - பெற்றோர் நலச் சங்க தலைவர் செ.அருமைநாதன், துணைத் தலைவர் ஜி.ராமலிங்கம், பொதுச் செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் ச.ஜாகிர் உசேன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர். படம்: ம.பிரபு M_PRABHU அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கம் சார்பில் ‘தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்ட உருவாக்கம்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. மதிப்பெண்கள் பிரதானப்படுத்தப்படுவதால், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பாடத் திட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மாணவர்கள் படிக்கின்றனர். மற்றவற்றை தவிர்த்துவிடுகின்றனர். ஆழமாக, முழுமையாக மாணவர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை. எனவே, அனைத்தையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் புளூபிரின்ட் அளிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடங்களுக்கு நடுவில் அந்த பாடத்துடன் தொடர்புடைய சுவாரஸ்ய தகவல்களும் பெட்டிச் செய்திகளாக இடம்பெறும். மேலும், அறிவியல் பாடங்களில் வாழ்க்கையோடு தொடர்புடையவற்றை எடுத்துக்காட்டுகளாக குறிப்பிட்டுள்ளோம். பாடத்துக்கும் நடைமுறைக்குமான இடைவெளி முடிந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பக்க வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் QR Code அளிக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து பார்த்தால் அந்த பாடத்தின் விளக்கத்தை ஆசிரியர் ஒருவர் வீடியோவில் விளக்குவார். பாடத் திட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக ஆசிரியர் வழிகாட்டு கையேடும் தயாராகி வருகிறது. பாடங்களை புதுமையாக நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் மூலம் மற்றவர்கள் பயன்பெறும் வகையிலும் ஆசிரியர்கள் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் குறித்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம். இவ்வாறு அறிவொளி பேசினார். பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தமிழக பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது என்று கூறி வந்தனர். தற்போது தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டி) தயாரிக்கும் பாடத்திட்டத்தைவிட அதிக தரத்தில் உள்ளது” என்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன், துணைத் தலைவர் ஜி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் ச.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விஐடி பல்கலைக்கழக பி.டெக். பொறியியல் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு மே 9-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடக்கம் .

விஐடி பல்கலைக்கழக பி.டெக். பொறியியல் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு மே 9-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடக்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த பி.டெக் பொறியியல் படிப்புக் கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மே 9-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கவுள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடந்தது. விஐடி வேலூர், சென்னை, போபால், அமராவதி வளாகங்கள் மற்றும் துபாய், குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகள் என மொத்தம் 175 மையங்களில் தேர்வு நடந்தது. கணினி முறையில் நடந்த தேர்வில் 2 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பி.டெக் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில், டெல்லியைச் சேர்ந்த மாண வர் கலாஸ் குப்தா முதலிடம் பிடித்தார். தெலங்கானா மாணவர் சரி கொன்ட அனந்த ராமா ராவ் இரண்டாமிடம், ஒடிசா மாணவர் அனிருத் பானிகி ரஹி மூன்றாமிடம் பிடித்தார். கர்நாடக மாநில மாணவர் சாய் அனிருத் நான்காமிடம், ஜார்க்கண்ட் மாணவர் சுபம் கர் ஐந்தாமிடம், மேற்கு வங்க மாணவர் சுபம் அகர்வால் ஆறாமிடம், சண்டீகர் மாணவர் பிரணவ் கோயல் ஏழாமிடம், டெல்லி மாணவர் சன் சித் அகர்வால் எட்டாமிடம், தமிழக மாணவர் விஷால் ஒன்பதாமிடம், உத்தரப் பிரதேச மாணவர் அன் மோல் குப்தா பத்தாமிடம் பிடித்தனர். நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான கவுன்சலிங் ரேங்க் அடிப்படையில் மே 9-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் 8 ஆயிரம் ரேங்க் பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் கில் பங்கேற்கலாம். 8001 முதல் 14 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்கள் மே 10-ம் தேதியும் 14,001 முதல் 20 ஆயிரம் வரையிலான ரேங்க் பெற்றவர்கள் மே 11-ம் தேதி நடைபெறும் கவுன்சலிங்கில் பங்கேற்கலாம். தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் வேலூர், சென்னை, போ பால், அமராவதி உள்ளிட்ட ஏதாவது ஒரு வளாகங்களில் நடைபெறும் கவுன்சலிங் கில் பங்கேற்கலாம். ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டம் ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் விஐடி நுழைவுத் தேர்வு மற்றும் மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பி.டெக் பொறியியல் படிப்புக்கான 4 ஆண்டுகளுக்கும் 100 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படும். முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீதம், 51 முதல் 100 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீதம், 101 முதல் 1000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படும்.

‘நீட்’ தேர்வு எழுதுகிற ‘தமிழக மாணவர்களுக்கு இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்’ ஐகோர்ட்டு உத்தரவு

‘நீட்’ தேர்வு எழுதுகிற தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில், வேளச்சேரியை சேர்ந்த வக்கீல் காளிமுத்து மயிலவன், ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவர், “மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள  நீட் தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது. வேறு மாநிலத்துக்கு தேர்வு எழுதச் செல்லும்போது, தமிழ் வழி கேள்வித்தாள்கள் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும். எனவே, தமிழக மாணவர்களுக்கு, இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார். இந்த வழக்கில் சி.பி.எஸ்.இ. இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இடம் இல்லாததால், அண்டை மாநிலங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு தொடர்பான எந்த ஒரு வழக்கையும் ஐகோர்ட்டு விசாரிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது, வழக்குதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன் ஆஜராகி வாதாடினார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- ‘நீட்’ தேர்வு தொடர்பாகத்தான் ஐகோர்ட்டு விசாரிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு மையங்கள் குறித்து விசாரிக்கக்கூடாது என்று கூறவில்லை. எனவே, இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உதவி வனப் பாதுகாவலர் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

உதவி வனப் பாதுகாவலர் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 14 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-1-ஏ முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வில் 10,459 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். முதல்நிலைத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் முதன்மைத்தேர்வுக்கு 472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. முதன்மைத்தேர்வு ஜுலை 28 முதல் ஆகஸ்டு 4-ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீட்டு வசதி வாரிய வீடுகளை பணி ஓய்வுக்கு பிறகு காலி செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
நந்தனம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கடந்த 1966-ல் அரசு ஊழியருக்கான ஒதுக்கீட்டில் வாடகைக்கு குடியேறியவர் ரத்தினம். இவர் கடந்த 2003-ல் காலமானார். இதையடுத்து வீட்டைக் காலி செய்யும்படி வீட்டு வசதித் துறை அவரது மகள் மணிமேகலைக்கு கடந்த 2007-ல் நோட்டீஸ் அனுப்பியது. வீட்டைக் காலி செய்யும் வாரியத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மணிமேகலை வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசு ஊழியர்களின் வசதிக்காகத் தான் வீட்டு வசதி வாரிய வீடுகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் முறைப்படி வீட்டை காலி செய்து தரவேண்டும். ஆனால் இந்த நடைமுறையை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. பணி ஓய்வுக்குப் பிறகும் அதே வீட்டில் வசிப்பதற்கு உரிமை கோர முடியாது. இந்த மனோபாவம் மாற வேண்டும். எனவே மனுதாரர் ஜூலை 31-க்குள் வீட்டை காலி செய்து வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் வீட்டைக் காலி செய்ய வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தள்ளிவைப்பு அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் அங்கிருந்து போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். 4-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இந்தநிலையில் நேற்று பிற்பகலில் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் இருந்து 10 பேர், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவை சந்திக்க சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. பேச்சுவார்த்தையின்போது ‘போராட்டத்தை கைவிட்டு வாருங்கள், உங்களது கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்று முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டக்குழுவினர் தலைமை செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக மாலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை போராட்டக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிகமாக தள்ளிவைப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அறிவித்து, போராட்டக்குழுவினர் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர். இந்த 4 நாட்கள் உண்ணாவிரதத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல்-அமைச்சரிடம்பேசுவேன் பேச்சுவார்த்தை முடிந்ததும், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு நபர் கமிஷனில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளும் ஒவ்வொரு துறைகளின் கோரிக்கைகளும் உள்ளன. அவற்றை அரசு பரிசீலித்துக் கொண்டு இருக்கிறது. சங்கத்தின் தலைவர் ராபர்ட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். அதுவும் நிலுவையில் இருக்கிறது. இது 2009-ம் ஆண்டு ஏற்பட்ட முரண்பாடு என்ற முறையில் அரசு அதை பற்றி பரிசீலித்துக் கொண்டுள்ளது. உண்ணாவிரதம் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று இருக்கிறார்கள். ஒரு நபர் கமிஷன் பரிந்துரை வந்தவுடன் முதல்-அமைச்சரிடம் பேசுவேன்’ என்றார். உச்சகட்ட போராட்டம் பின்னர், அங்கிருந்து புறப்பட்ட போராட்டக்குழுவின் நிர்வாகிகள் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர். அவர்களின் அறிவிப்புக்காக இடைநிலை ஆசிரியர்கள் ஆவலோடு காத்து இருந்தனர். அவர்களிடம் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் நம்முடைய உண்ணாவிரதத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம். உடனடியாக அரசு ஆணை பெற முடியாவிட்டாலும், 3 மாதம் கழித்து நாம் எதிர்பார்த்த அரசு ஆணை கிடைக்கும் என்று 99 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. மீதம் உள்ள ஒரு சதவீதம் தவறினால், உச்ச கட்ட போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கும் என்று கூறினார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 3-ம் கட்ட பேச்சுவார்த்தை அரசுடன் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில், பள்ளிக்கல்வி துறை செயலாளர் எங்களுடைய கோரிக்கையை, நியாயத்தை புரிந்து கொண்டு மனுவை பெற்று, அதனை ஒரு நபர் கமிஷனுக்கு அளித்து, நகலையும் எழுத்துப்பூர்வமான நகலையும் தருவேன் என்று உறுதியளித்துள்ளார். அமைச்சரையும் சந்தித்தோம். அவரும் ஒருநபர் கமிஷனில் உங்களுடைய ஊதியக்குழுவை களைய முதல்-அமைச்சர் வரை சென்று அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார். அதனை ஏற்று, உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். புறப்பட்டு சென்றனர் இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் அங்கிருந்து தங்கள் உடைமைகளுடன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு போலீசார் சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்து இருந்தனர்.

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதம்...ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமான ஒன்றுதான்... - தினத்தந்தி தலையங்கம்

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதம் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கை செம்மைப்படுவதற்கும், வளம்பெறுவதற்குமான அடிப்படையாகும். அனைவருக்கும் கல்வி என்பதில் பெருந்தலைவர் காமராஜர் முனைப்புடன் செயல்பட்டார். அதிலும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தொடக்கக்கல்வி பக்கத்தில் கிடைக்கவேண்டும் என்ற ஆர்வத்தில்தான் நிறைய தொடக்கக் கல்விக்கூடங்களை தொடங்கினார். அதனால்தான் சமுதாயம் அவரை கல்விக்கண் திறந்த காமராஜர் என்று போற்றுகிறது. ஒரு கட்டிடத்துக்கு அஸ்திவாரம்போல, கல்விக்கு அடித்தளம் தொடக்கக்கல்விதான். அந்தவகையில், ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ படித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், எழுத்தறிவிக்கும் இறைவனாக கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். ஏராளமான ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லவேளையாக இப்போது பள்ளிக்கூடங்களுக்கு கோடைகால விடுமுறை. பள்ளிக்கூடம் நடக்கும் நாட்களில் வேலைநிறுத்தம் நடந்திருந்தால் 1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மழலைகளின் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும். தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ‘சமவேலைக்கு சமஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினார்கள். இவர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதிக்குப்பிறகு பணியில் சேர்ந்தவர்கள். அவர்களது குறை என்னவென்றால், 2009-ம் ஆண்டு மே 31-ந்தேதிவரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன், அனைத்து படிகளையும் சேர்த்து ரூ.42 ஆயிரம்வரை வழங்கப்படுகிறது என்றும், 2009 ஜூன் 1-ந்தேதி முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.26,500 மட்டுமே வழங்கப்படுகிறது என்பதுதான். ஒருநாளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் ரூ.15,500 கூடுதலாக வாங்குகிறார்கள். அவ்வாறு வித்தியாசம் இருக்கக்கூடாது. எங்களுக்கும் அதேஊதியம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இது 7-வது சம்பளக்குழு நிர்ணயம் செய்த ஊதியம். ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமான ஒன்றுதான். நீண்டகால கோரிக்கை இது. ஆனால், தற்போது இதுபோன்ற தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, அரசு நிதித்துறை செயலாளர் (செலவினம்) எம்.எஸ்.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊதியம் முரண்பாடு மற்றும் ஊதிய மாற்றம் தொடர்பான கோரிக்கைகளை இந்த ஒருநபர் குழு ஆய்வு செய்யும். இந்தக்குழு, மனுதாரர்கள் மற்றும் அரசு பணியாளர் சங்கங்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட சம்பளத்தை நிர்ணயித்துள்ள விதம், திருத்தங்களால் கிடைக்கும் சிறப்பு ஊதியம், படிகள் பற்றிய சந்தேகங்களையும் முன்வைக்கலாம். அதையும் இந்தக்குழு ஆராயும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு தெரிவித்தபடி, ஒருநபர் குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் முகவரி omc_2018@tn.gov.in வாயிலாகவோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் உடனடியாக இந்த ஒருநபர் குழுவுக்கு விண்ணப்பிக்கலாம். ஒருநபர் குழுவும், இந்த ஆசிரியர்களையோ, அவர்களுடைய சங்கத்தையோ உடனடியாக அழைத்துப் பேசவேண்டும். இந்த பிரச்சினைக்கு முடிவுகாண அரசும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பிரச்சினைகளுக்கு போராட்டம்தான் தீர்வு என்றநிலை இருசாராராலும் தவிர்க்கப்படவேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் | இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளமும் அதற்கு முன் பணியில் இணைந்தவர்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. ஆறாவது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தி வந்தனர். கடந்த நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுடன் கிண்டியில் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் பழச்சாறு அருந்தி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோனை

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது

ஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

ஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என்பதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 6-வது ஊதியக் குழுவுக்கு முன்பு அதாவது 31-12-2005 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 – 125 – 7000 என்ற ஊதிய விகிதம்இருந்தது. 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி ரூ. 5,200 – 20,200 + தர ஊதியம் 2,800 என திருத்திய ஊதிய விகிதம் 1-1-2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒருநபர் குழு பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-8-2010 முதல் மாதம் ரூ.500 சிறப்புப் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்புப் படியை ரூ. 750 ஆக உயர்த்தி தனி ஊதியமாக வழங்க 12-1-2011-ல் ஆணையிடப்பட்டது. 1-1-2011 முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.20,600 – 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி ஊதியம் ரூ.750-லிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 14,719 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டது. ஆனாலும் பல்வேறு தரப்பு ஊழியர்களின் நலன் கருதி அரசு இதனை ஏற்றுக்கொண்டது. அதோடு இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய இயலும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) பிறருடைய தூண்டுதலின்பேரில் கடந்த 23-ம் தேதி முதல் எந்தவித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நானும், பள்ளிக்கல்வித் துறை செயலாளரும் அவர்களை அழைத்து பேசிய பிறகும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்தப் பிரச்சனைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்கள் தகுதி சான்றிதழ் வாங்க தேவையில்லை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

நீட் தேர்வில் தகுதிபெற்று மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், தகுதிச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத மாணவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க சென்றவர்கள் நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டுமா என்று விளக்கம் கேட்டு மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) வந்தன. இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் (பொறுப்பு) டாக்டர் ரீனா நாயர் வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது: வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க கடந்த ஆண்டு சென்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுத தேவையில்லை. அந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படு கிறது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் இந்திய மருத்துவ கவுன்சிலில் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர் களுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதிப் பெற்று வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெறத் தேவை யில்லை. இவ்வாறு டாக்டர் ரீனா நாயர் தெரிவித்துள்ளார். லிம்ரா நிறுவனத்தின் இயக்கு நர் முகமது கனியிடம் இது குறித்து கேட்டபோது, “பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து முடித்தவர்கள், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுத வேண்டும். நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வெளிநாடு செல்பவர்கள் இந்த தகுதிச் சான்றிதழ் வாங்கத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், தகுதித் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும்” என்றார்.

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் இடைநிலை ஆசிரியர் போராட்டம் தீவிரம் 50 பேர் மயக்கம்

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் இடைநிலை ஆசிரியர் போராட்டம் தீவிரம் 50 பேர் மயக்கம்; மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு ஊதிய முரண்பாட்டை களையக் கோரி யில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. உடல் சோர்வு மற்றும் மயக்கம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர்  மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 1.6.2009-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்குப் பின்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம வேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஊதிய முரண்பாட்டை சரிசெய் யக் கோரி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த திங்கள்கிழமை குடும்பத்தோடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத் தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின் னர் அங்கிருந்து வள்ளுவர் கோட் டம் அருகேயுள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். இந்நிலையில் ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக நேற் றும் தொடர்ந்தது. குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். உடல் சோர்வு ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து ஆசிரியர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை செயலா ளர் பிரதீப் யாதவை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினார். ஆசிரியர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அவரிடம் எடுத்துரைத்தார். உடனடியாக அரசின் கவனத்துக்கு உண்மை நிலவரங்களை கூறி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்போது கேட்டுக் கொண்டார். மேலும் காங்கிரஸ் குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறும்போது, “எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடரும். ஊதிய முரண்பாடு பிரச்சினை தொடர் பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். ஊதிய முரண்பாடு சரிசெய்யப்படும் என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்றனர்.

குரூப்-1 ஏ தேர்வில் தேர்வானவர்களுக்கு மெயின்தேர்வு ஜூலை மாதம் நடக்கிறது

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
குரூப்-1 ஏ தேர்வில் அடங்கிய உதவி வன பாதுகாவலர் 24 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதில் 472 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடபட்டுள்ளது. அவர்களுக்கு மெயின் தேர்வு ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தகவலை அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பரிதாபம்: ‘நீட்’ தேர்வுக்கு படித்த அரசு அதிகாரியின் மகன் தற்கொலை முகத்தில் பாலித்தீன் பையை மாட்டி உயிரை மாய்த்த சோகம்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
சேலத்தில் முகத்தில் பாலித்தீன் பையை மாட்டி ‘நீட்’ தேர்வுக்கு படித்த அரசு அதிகாரியின் மகன் தற்கொலை செய்து கொண்டார். அரசு அதிகாரி மகன் சேலம் ராஜாராம் நகர் தமிழ்ச்சங்கம் ரோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் கருப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகன் கெவின்ஹரி (வயது 19). இவர் கடந்த ஆண்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். மேலும் அவர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக ‘நீட்’ தேர்வு எழுதினார். இதில் தோல்வி அடைந்தார். இருப்பினும், வேறு பாடப்பிரிவு எடுத்து படிக்காமல் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார். பாலித்தீன் பையை மாட்டி சாவு இதற்காக கெவின்ஹரி சேலத்தில் உள்ள ‘நீட்’ தேர்விற்கான தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் வீட்டில் இருந்தே படித்து வந்தார். அவ்வப்போது அவர் செல்போனில் நீண்டநேரம் செலவழித்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரிடம், ‘நீட்’ தேர்வுக்கு இன்னும் கொஞ்சம் நாட்களே இருப்பதால் நன்றாக படி என்று கூறியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை அவரது தாயார் கெவின்ஹரி அறைக்கு சென்று கதவை தட்டினார். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கெவின்ஹரி, தன்னுடைய முகத்தில் 2 பாலித்தீன் பையை சுற்றியதுடன் கயிற்றால் கட்டி மூச்சுத்திணறி இறந்து கிடந்தார். நீல திமிங்கலம் விளையாட்டு இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கெவின்ஹரி ‘நீட்’ தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது செல்போனில் நீல திமிங்கலம் விளையாட்டை விளையாடி அதனால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கெவின்ஹரி தன்னுடைய உடல் எடை அதிகமாக இருப்பதாக பலரிடம் கூறி புலம்பி வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி சென்னை மைதானத்தில் குடும்பத்துடன் இரவு முழுக்க தங்கினர் இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மயங்கி விழுந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதி: அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி சென்னை மைதானத்தில் குடும்பத்துடன் இரவு முழுக்க தங்கினர் இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மயங்கி விழுந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதி: அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் சக ஆசிரியர்கள்.படங்கள்: ம.பிரபு ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி யில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள தொடர் உண்ணா விரதப் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. உண்ணாவிரதத்தின்போது மயங்கி விழுந்த 29 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை காலை முதல் குடும்பத்தினரோடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி டிபிஐ முதன்மை நுழைவு வாயில் முன்பு கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் கைதுசெய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கேயும் அவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. போலீஸார் அவர்களை விடுவித்தபோதும் யாரும் வெளியேறவில்லை. உணவு ஏதும் சாப்பிடாமல் குடும்பத்தோடு போராட்டத்தை தொடர்ந்தனர். வீட்டில் இருந்து கொண்டுவந்த போர்வையை விரித்து தரையில் படுத்து உறங்கினர். உடன்பாடு ஏற்படவில்லை இந்தச் சூழலில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரைப்படி, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம் சென்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவை சந்தித்துப் பேசினர். ஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு அமைத்துள்ள குழுவிடம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை அனுப்புவதாகவும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால். ஊதிய முரண்பாட்டை சரிசெய்யும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட மாதத்துக்குள் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் என்று உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அவரிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் எழும்பூர் விளையாட்டு மைதானத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: தமிழகத்தில் 6-வது ஊதியக் குழு உத்தரவை அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 6-வது ஊதியக்குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. நாங்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை கேட்கவில்லை. மாநிலத்தில் எங்களின் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைத்தான் கேட்கிறோம். . கடந்த 2016-ம் ஆண்டு 8 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், எங்கள் ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அந்த உத்தரவாதம் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. தமிழக அரசு தொடர்ந்து எங்களை ஏமாற்றி வருகிறது. அதனால்தான் வேறு வழியில்லாமல் குடும்பத்தோடு காவவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஊதிய முரண்பாட்டை சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் அல்லது 2 மாதங்களில் அரசாணை வெளியிடப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும். அதுவரையில் எங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். இவ்வாறு ராபர்ட் கூறினார். இதற்கிடையே தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 29 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் 158 அதிகாரிப் பணி

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பணி | மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், ஐ.சி.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். வயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். ஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofindia.co.in ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம் பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி ஆன்லைன் பதிவு தொடக்கம் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்   நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் பேசுகிறார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். உடன் (இடமிருந்து) தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் சுனில் பாலிவால், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ். பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நவம்பர் 29-ம் தேதி வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடையும். ஆன்லைன் கலந்தாய்வுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு ஜுன் முதல் வாரத்திலும் ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்திலும் தொடங்கும். மே 16-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் சிறிய அளவில் மாற்றம் இருந்தால் மேற்கண்ட அட்டவணைப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கிவிடும். ஒருவேளை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தள்ளிப்போகக் கூடிய சூழல் ஏற்பட்டாலோ, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சற்று தாமதமானாலோ பொறியியல் மாணவர் சேர்க்கை அட்டவணையில் மாற்றம் வரும். பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடி பதிவுசெய்து கொள்ளலாம். வெளியில் தனியார் கணினி மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. வீட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்களுக்காக குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று இலவசமாக ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் முகவரி, கலந்தாய்வு கோடு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, ஆன்லைன் கலந்தாய்வு குறித்து மாணவர்களுக்கு வீடியோ மூலம் விளக்கம் அளிக்கப்படும். குறிப்பிட்ட நாளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை மையங்களில் கடைசியாக ஒருநாள் அவகாசம் அளிக்கப்படு்ம். அப்போதும் அவர்கள் வரவில்லை எனில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம். உடல்நலக் குறைவு உள்ளிட்ட ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தினால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வரமுடியவில்லை எனில், அவர்கள் சார்பில் பெற்றோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். வழக்கமாக ஆன்லைன் பதிவு விண்ணப்பத்தை மாணவர்கள் நேரிலோ, தபால் மூலமாக சமர்ப்பிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அதுபோன்று அனுப்பத் தேவையில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திலே ஆன்லைன் பதிவு விண்ணப்பத்தில் போட்டோ ஓட்டி, கையெழுத்திட்டு சமர்த்துவிடலாம். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார். பேட்டியின்போது உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

7-வது ஊதியக்குழுவில் முரண்பாடுகளை நீக்கக்கோரி டி.பி.ஐ. வளாகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை

7-வது ஊதியக்குழுவில் முரண்பாடுகளை நீக்கக்கோரி டி.பி.ஐ. வளாகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை கைது செய்யப்பட்ட பின்பும் தொடர்ந்து போராட்டம் போராட்டத்தில் கைதான இடைநிலை ஆசிரியர்கள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி. சென்னை, ஏப்.24- 7-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். டி.பி.ஐ வளாகம் 7-வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 23-ந்தேதி(அதாவது நேற்று) முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் நேற்று காலை டி.பி.ஐ. முன்பு குவியத்தொடங்கினர். இதனால் டி.பி.ஐ. முன்பும், உள்ளேயும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது டி.பி.ஐ. வளாகம் நோக்கி முன்னேறிய இடைநிலை ஆசிரியர்களை கலைந்து செல்லும்படி போலீசார் தெரிவித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானோர் பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். அரசு முயற்சி எடுக்கவில்லை இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய அரசியலமைப்பு சட்டமும், சுப்ரீம் கோர்ட்டும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் இந்த ஊதிய முரண்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது இடைநிலை ஆசிரியர்கள் தான். இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு 8 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அப்போது 7-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகள் சரிசெய்ய பரிந்துரை செய்யப்படும் என்று அரசு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு கொடுத்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் இதுவரை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை நியாயமான போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இரவு வரையிலும் போராட்டம் இதற்கிடையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகள் தலைமை செயலகத்துக்கு சென்று அங்குள்ள பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாத அவர்கள் நேற்று இரவு வரையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஆங்கில மருத்துவம் பார்க்கும் திட்டம் இணைப்பு பயற்சி மையம் அமைக்க மத்திய அரசு முயற்சி

ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி பயின்றவர்கள் ஆங்கில மருத்துவமும் பார்க்க அனுமதிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் மாற்றம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு ஒரு புதிய திட்டம் வகுத்திருந்தது. இதன்படி, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மாற்று மருத்துவப் பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை ஆங்கில மருத்துவமும் பார்க்க அனுமதிப்பது, அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்று முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதில், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றத்தில் ‘தேசிய மருத்துவ ஆணையம் மசோதா 2017’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், எம்.பி.க்கள் நிலைக்குழுவின் ஆய்வுக்கு மசோதா பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், மாற்று மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதிப்பதை எம்.பி.க்கள் ஏற்கவில்லை. அதையும் மீறி இணைப்பு பயிற்சி நிறுவனங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் மருத்துவ நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் எண்ணிக்கை வரும் காலங்களிலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இல்லை. இதுதொடர்பாக நிதி ஆயோக் அதிகாரிகளுடன் எங்கள் அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில், இணைப்பு பயிற்சி பெற்ற மாற்று மருத்துவர்களை பயன்படுத்தும் மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்று நிதி ஆயோக் அதிகாரிகள் கூறினர்” என்று தெரிவித்தன. இணைப்பு பயிற்சிக்கான பாடத்திட்டங்களை இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழகம் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வரும் 2019-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு 15,000 இணைப்பு பயிற்சி மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை ஆங்கில மருத்துவர்கள் எதிர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தில் மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக் காலியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு துறைத்தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை அனுப்பி குறிப்பிட்ட துறைகளின் ஒப்புதல் பெற்று காலியிடங்களை நிரப்புவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. துறைத்தலைவர் மூலம் அனுப்பப்படும் காலியிடங்களுக்கு அப்படியே ஒப்புதல் கிடைக்கும் என்று சொல்லவும் முடியாது. அரசின் நிதிநிலையை காரணம் காட்டி காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலர் எஸ். ஸ்வர்ணா அண்மையில் வெளியிட்ட அரசாணை: அரசு துறைகளில் காலியிடங்களை விரைவாக நிரப்பும் வகையில், காலியிடங்களை கணக்கிடுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்துவரும் முறையை மாற்றியமைக்க அரசு முடிவுசெய்துள்ளது. துறைத்தலைவர்கள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்தில் காலியிடங்களுக்கு நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறாமல் அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். அதேபோல், துறைத்தலைவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள சார்நிலை அதிகாரிகள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்திலும் இதே நடைமுறை பொருந்தும். டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாக நிரப்பப்படும் பணிகளில் உள்ள காலியிடங்களையும் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. என்ஜிஓ சங்கம் வரவேற்பு அரசு துறைகளில் காலியிடங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்ஜிஓ) மாநில தலைவர் இரா.சண்முகராஜன் கூறும்போது, “புதிய முறையின்படி நேரம் பெருமளவு மிச்சமாகும். எனவே, நேரடி பணிநியமனங்கள் விரைவாக முடிக்கப்படும். இப்புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது” என்றார். “தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

மின்வாரிய கள உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

சிஐடியு தொழிற்சங்கம், அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மின்வாரிய கள உதவியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி யில் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 900 கள உதவியாளர் பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்ப மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மின்வாரிய சிஐடியு தொழிற்சங்கமும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கள உதவியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் டி.ஜெ.நினைவகம், எண்.177, சிங்கண்ண செட்டி தெரு, சிந்தாரிப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் வரும் மே 1-ம் தேதி முதல் வார இறுதி நாட்களில் நடைபெறும். இதில் ஐடிஐ (எலக்ட்ரீசியன், வையர்மேன் டிரேட்) படித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 9444057470, 9444250709, 9841744639 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த 300 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த 300 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது ச.கார்த்திகேயன் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம் படுத்தும் விதமாக 300 ஆசிரியர் களுக்கு உளவியல் பயிற்சியை மாநகராட்சி அளிக் கிறது. சென்னை மாநகராட்சியில் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 85 ஆயிரத்து 910 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 186 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 சதவீதம் அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும், மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்நிலையில் அவர்களின் கற்கும் திறனை மேம் படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கும் ‘ஸ்பார்க்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் சிறப்பான மதிப்பெண்களை மாணவர்கள் பெற முடிவதில்லை. மாநகராட்சி பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை மாணவர்களே படித்து வருகின்றனர். இம்மாணவர்களின் தாய் தந்தையர் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருப்பர். அதனால் குழந்தைகளைக் கவனிக்க முடியாத நிலை இருக்கும். சில குடும்பங்களின் தலைவர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களாக இருப்பர். அதனால் ஏற்படும் குடும்பச் சண்டைகளால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு, கற்பதில் நாட்டம் இல்லாமல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேர்வுக்கு தயார்படுத்த... இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகி, உரிய ஆலோசனைகளை வழங்கி, அவர்களைத் தேர்வுக்கு தயார் படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பயிற்சிகளையும் மாநகராட்சி நிர்வாகம் ஆசிரியர் களுக்கு வழங்கி வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: வழக்கமாக பெற்றோர்களிடம் குழந்தைகள் மனம்விட்டு பேசுவதில்லை. அதே நேரத்தில் ஆசிரியர்களிடம் வெளிப்படையாக பேசுவார்கள். அதனால் முதல்கட்டமாக மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் 300 பேருக்கு, உளவியல் ரீதியாக மாணவர்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பயிற்சியை, குழந்தை உளவியல் சிறப்பு மருத்துவர்கள் மூலமாக வழங்கி வருகிறோம். மாணவர்களுக்கு ஆலோசனை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை உளவியல் ஆலோசகராக செயல்பட அறிவுறுத்தி இருக்கிறோம். அவர்கள் மாணவர்களிடம் பேசி, அவர்களுக்குள்ள பிரச்சினைகளை அறிந்து, ஆசிரியர்களின் அதிகாரித்துக்கு உட்பட்டு உரிய ஆலோசனைகளை வழங்கி பிரச்சினைகளில் இருந்து மாணவர்கள் விடுபடுவதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள். இதன்மூலம் மாணவர்களுக்கு தானாகவே கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்பட்டுவிடும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் ஏதுவாக இருக்கும். ஆசிரியர்கள் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள உதவி மருத்துவ அதிகாரி பணி.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு உதவி மருத்துவ அதிகாரி (லெக்சரர்- யோகா மற்றும் நேச்சுரோபதி) பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். நேச்சுரோபதி டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்திய மருத்துவ துறையில் தமிழக வாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

பரோடா வங்கியில் சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் 6-5-2018-ந் தேதியாகும்.

பிரபல வங்கிகளில் 582 அதிகாரி பணிகள் 2 முன்னணி வங்கிகளில் அதிகாரி பணிக்கு 582 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்ட பிரபல வங்கியான இதில் தற்போது எச்.ஆர். தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 375 இடங்களும், டெரிட்டோரி ஹெட் பணிக்கு 37 இடங்களும், குரூப் ஹெட் பணிக்கு 6 இடங்களும் உள்ளன. மற்றும் சில பிரிவில் மேலாளர் தரத்திலான பணிகள் உள்ளன. மொத்தம் 424 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு பிரிவு பணிகளிலும் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா, அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, கோவை, இந்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இந்த பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு: சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணிக்கு 23 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 6-5-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக் கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், பணியிடங்கள் உள்ள பிரிவில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர்களுக்கு ஏராளமான பிரிவில் பணி வாய்ப்புகள் உள்ளன. எம்.பி.ஏ. படிப்பு சிறப்புத் தகுதியாக கருதப்படுகிறது. தேர்வு செய்யும் முறை: குழு கலந்துரையாடல் அல்லது நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 6-5-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bankofbaroda.co.in/careers.htm என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 உதவியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் உள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன. எம்.பி.ஏ., முதுநிலை மார்க்கெட்டிங் படிப்பு, எம்.பி.பி.எஸ்., எம்.இ., எம்.டெக். (சிவில்/பயர்), ஜியாலஜி பட்டப்படிப்பு, மற்றும் சட்டம் உள்ளிட்ட இதர பட்டப்படிப்பு படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-5-2018-ந் தேதியாகும்.

வேலைவாய்ப்பு - கால அட்டவணை

வேலைவாய்ப்பு - கால அட்டவணை

தேசிய விதை நிறுவனத்தில் 258 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 5-5-2018-ந் தேதியாகும்.

தேசிய விதை நிறுவனத்தில் 258 பணியிடங்கள் தேசிய விதை கழக நிறுவனம் சுருக்கமாக என்.எஸ்.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 258 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி அக்ரி மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 5-5-2018 தேதியில் 23 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.525 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.indiaseeds.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

ஜிப்மர் மருத்துவமனையில் நர்சிங் அதிகாரி வேலை

ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ஜிப்மர் என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் தற்போது நர்சிங் ஆபீசர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் (குரூப்-சி) பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நர்சிங் ஆபீசர் பணிக்கு மட்டும் 91 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். நர்சிங் ஆபீசர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18-5-2018 இதழில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் ஜெனரல் நர்சிங் அண்ட் மிட் வைபரி பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்து நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்தவர்களாக இருக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கணினித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டியது குறிப்பிடத்தக்கது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1200 செலுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 18.5.2018-ந் தேதி. இதுபற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளள www.jipmer.puducherry.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.