தொழிலாளர் நலத்துறையில் முத்திரை கொல்லர்கள் காலி பணியிட நியமனம் மே 10-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
தொழிலாளர் நலத்துறையில் முத்திரை கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் அ.யாஸ்மின் பேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய முத்திரை ஆய்வர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 முத்திரை கொல்லர் பணியிடங்கள், இன சுழற்சி விதிகள் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை ஆகியோர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை சென்னையில் உள்ள கூடு தல் தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் இணை ஆணையர் -1, தொழிலாளர் இணை ஆணையர் -2 மற்றும் வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய அலுவலகங்களிலும் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை இணைத்து, மே.10-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ கிடைக்கும்படி கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நலவாரிய கட்டிடம், 6-வது தளம், டிஎம்எஸ்வளாகம், சென்னை- 600006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments