ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி சென்னை மைதானத்தில் குடும்பத்துடன் இரவு முழுக்க தங்கினர் இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மயங்கி விழுந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதி: அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி சென்னை மைதானத்தில் குடும்பத்துடன் இரவு முழுக்க தங்கினர் இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மயங்கி விழுந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதி: அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் சக ஆசிரியர்கள்.படங்கள்: ம.பிரபு ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி யில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள தொடர் உண்ணா விரதப் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. உண்ணாவிரதத்தின்போது மயங்கி விழுந்த 29 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை காலை முதல் குடும்பத்தினரோடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி டிபிஐ முதன்மை நுழைவு வாயில் முன்பு கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் கைதுசெய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கேயும் அவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. போலீஸார் அவர்களை விடுவித்தபோதும் யாரும் வெளியேறவில்லை. உணவு ஏதும் சாப்பிடாமல் குடும்பத்தோடு போராட்டத்தை தொடர்ந்தனர். வீட்டில் இருந்து கொண்டுவந்த போர்வையை விரித்து தரையில் படுத்து உறங்கினர். உடன்பாடு ஏற்படவில்லை இந்தச் சூழலில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரைப்படி, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம் சென்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவை சந்தித்துப் பேசினர். ஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு அமைத்துள்ள குழுவிடம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை அனுப்புவதாகவும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால். ஊதிய முரண்பாட்டை சரிசெய்யும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட மாதத்துக்குள் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் என்று உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அவரிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் எழும்பூர் விளையாட்டு மைதானத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: தமிழகத்தில் 6-வது ஊதியக் குழு உத்தரவை அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 6-வது ஊதியக்குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. நாங்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை கேட்கவில்லை. மாநிலத்தில் எங்களின் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைத்தான் கேட்கிறோம். . கடந்த 2016-ம் ஆண்டு 8 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், எங்கள் ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அந்த உத்தரவாதம் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. தமிழக அரசு தொடர்ந்து எங்களை ஏமாற்றி வருகிறது. அதனால்தான் வேறு வழியில்லாமல் குடும்பத்தோடு காவவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஊதிய முரண்பாட்டை சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் அல்லது 2 மாதங்களில் அரசாணை வெளியிடப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும். அதுவரையில் எங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். இவ்வாறு ராபர்ட் கூறினார். இதற்கிடையே தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 29 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||