2013-ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 94 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணியில் முன்னுரிமை

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
2013-ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 94 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணியில் முன்னுரிமை தமிழக அரசுக்கு, ஜி.கே.வாசன் வலியுறுத்தல் சென்னை, ஏப்.9- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 94 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது இன்னும் அவர்களுக்கு பணி வழங்கப்படாமல் இருக்கும் தமிழக அரசை த.மா.கா. சார்பில் கண்டிக்கிறேன். வெயிட்டேஜ் முறை மாறாவிட்டாலும் பரவாயில்லை, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படாத நிலையில் அவர்களின் சான்றிதழ் இன்னும் 2 ஆண்டுகளில் காலாவதியாகிவிடும் என்பதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் பணி நியமன ஆணையை வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments