டான்செட் தேர்வுக்கு ஏப்.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'டான்செட்' தேர்வுக்கு ஏப்.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மூலம் நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்து கிறது. வரும் கல்வியாண்டு (2018-19) மாணவர் சேர்க்கைக்கான டான்செட் தேர்வுகள் மே 19, 20-ல் நடக்க உள்ளன. மே 19 காலை எம்சிஏ படிப்புக்கான தேர்வு, பிற்பகல் எம்பிஏ நுழைவுத் தேர்வு, 20-ம் தேதி காலை எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் தேர்வு நடத்தப்படும். இதற்கு இணையதளம் (www.annauniv.edu) மூலம் ஏப்ரல் 23 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

  1. Get the full details of JEE Main 2018 Answer key Vidyamandir Classes Steps to view the answer key released by Vidyamandir Classes have also been given here. The advantages of using the Vidyamandir Answer Key released by the institute are also provided in this article.

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||