தேசிய விதை நிறுவனத்தில் 258 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 5-5-2018-ந் தேதியாகும்.

தேசிய விதை நிறுவனத்தில் 258 பணியிடங்கள் தேசிய விதை கழக நிறுவனம் சுருக்கமாக என்.எஸ்.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 258 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி அக்ரி மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 5-5-2018 தேதியில் 23 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.525 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.indiaseeds.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||