எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் 2 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தது மாணவர்கள் கருத்து

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் 2 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். கணித தேர்வு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிவிட்டு வந்த சில மாணவர்களிடம் தேர்வு எப்படி இருந்தது? என்று கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:- தேர்வு கடினமாக இருந்தது. முதலில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்பட்டிருந்தன. அதில் 12 கேள்விகள் எளிதாக இருந்தன. 3 கேள்விகள் சற்று கடினமாக கேட்கப்பட்டிருந்தன. அதற்கு அடுத்தபடியாக 2 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்பட்டிருந்தன. அதில் பெரும்பாலான கேள்விகள் சுயமாக கேட்கப்பட்டு இருந்ததால் அவை அனைத்தும் கடினமாக இருந்தது. மற்ற 5 மதிப்பெண் கேள்விகள், 20 மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதுதான். இதனால் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். திருப்புதல் தேர்வு திருப்புதல் தேர்வில் (ரிவிசன் டெஸ்ட்) கடினமான கேள்விகள் கேட்டிருந்தால் பொதுத்தேர்விலும் கடினமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் திருப்புதல் தேர்வில் எளிதாக கேட்டுவிட்டு, பொதுத்தேர்வில் இப்படி கடினமாக கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாணவர்கள் கூறினார்கள். அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் சரியான முறையில் தான் கேட்கப்பட்டுள்ளது. கணக்கை புரிந்து மாணவர்கள் படிக்க வேண்டும், மனப்பாடம் செய்யக்கூடாது என்றார்.

Comments