திறந்தநிலை கல்வி நிறுவன பிளஸ் 2 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத அனுமதி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
திறந்தநிலை கல்வி நிறுவன பிளஸ் 2 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத அனுமதி இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள், நீட் தேர்வு எழுதலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித் துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கிறது. தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் (National Institute of Open Schooling - NIOS), மாநில அரசுகள் நடத்தும் திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ் 2 படிப்பவர்கள், பள்ளிக்குச் செல்லாமல் படிக்கின்றனர். அவர்களுக்கு செய்முறைத் தேர்வு இல்லை. அந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு எழுத அனுமதித்த இந்திய மருத்துவக் கவுன்சில், இந்த ஆண்டு அனுமதி இல்லையென்று கூறியதால், நாடுமுழுவதும் பிளஸ் 2 படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றம் உத்தரவு இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை, இந்த முடிவினை பரிசீலனை செய்யும்படி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது. மாணவர்கள் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த மாணவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதால், நீட் தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையில் மாணவர்கள் இருந்தனர். இந்நிலையில் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம். ஆனால், மாணவர் சேர்க்கை என்பது நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||