தொலைதூரக்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு ஏப்.30-ம் தேதி வரை நீட்டிப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தொலைதூரக்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு ஏப்.30-ம் தேதி வரை நீட்டிப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு | பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2017-2018-ம் கல்வி ஆண்டுக்கான (அகாடமிக் இயர்) இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி படிப்புகள் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளவும் கடைசி நாள் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் செயல்படும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் மூலம் சேரலாம். இந்த மையம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். மேலும், மாணவர்கள் www.ideunom.ac.in / www.unom.ac.in இணையதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவும் சேரலாம். இவ்வாறு பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments