ஐடிஐ தொடங்க 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
புதிதாக ஐடிஐ தொடங்க விரும்புவோர் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித் துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இணையதள விண்ணப்பம் 2017-18-ம் ஆண்டு முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல பயிற்சி இணை இயக்குநரால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் தற்போது 2018-19-ம் ஆண்டு அங்கீகாரம் பெற்று புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வெளிப்படைத் தன்மை எனவே, புதிதாக அங்கீகாரம் கோரும் தொழிற்பள்ளிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள இணையதளம் மூலம் செயல்படுத்தப் படுவதால் தொழிற்பள்ளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Comments