வருமான வரிச்சட்டம் 80-ஜி பிரிவு

வருமான வரிச்சட்டம் 80-ஜி பிரிவு

வருமான வரிச்சட்டத்தின் 80ஜி பிரிவு பற்றி நிபுணர்கள் கூறும் சில முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1.வரி விதிப்புக்கு இலக்காகக் கூடிய வருமானம் பற்றிய முடிவுக்கு வருமுன் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை கழித்துக் கொள்ள வருமான வரிச்சட்டத்தின் 80ஜி பிரிவு அனுமதி அளிக்கிறது.

2.முறையான நன்கொடை ஒன்றை வழங்கும் எந்த ஒரு நபரும் (அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்) இந்த கழிவுச் சலுகையை கோரலாம்.

3.வழங்கும் நன்கொடை ரொக்க வடிவிலோ அல்லது காசோலை வடிவிலோ இருக்கலாம். நன்கொடை ரொக்கமாக வழங்கப்படும் பட்சத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 2,000 ரூபாய்க்கு வரிக்கழிவு பெறலாம். இந்த விதிமுறை 2018-19 மதிப்பீட்டு ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

4.நன்கொடை வழங்கப்படும் அமைப்பை (அல்லது நிறுவனத்தை) பொறுத்து கழிவுச் சலுகையாக கோரப்படக்கூடிய தொகை இருக்கும். நன்கொடை தொகையில் 100 சதவீதம் அல்லது 50 சதவீதத்திற்கு வரிச்சலுகை கோரலாம்.

5.80ஜி பிரிவின் கீழ் வரிக்கழிவுச் சலுகை பெற வேண்டுமானால் நன்கொடை பெற்ற அமைப்பிடம் இருந்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். அந்த ரசீதில் நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் பான் எண்ணுடன் நன்கொடையாளரின் பெயர் மற்றும் தொகை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். 

Comments