ஐஏஎஸ் பயிற்சியில் சேர கிங் மேக்கர்ஸ் அகாடமியில் நாளை (8.4.2017) சிறப்பு தேர்வு

ஐஏஎஸ் பயிற்சியில் சேர கிங் மேக்கர்ஸ் அகாடமியில் நாளை (8.4.2017) சிறப்பு தேர்வு கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு தேர்வை நடத்தவுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சிறந்த சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் 104 மத்திய ஆட்சிப் பணியாளர்களை உருவாக்கிய பெருமை கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமிக்கு உண்டு. இங்கு சமூக பொறுப்புணர்வு முயற்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான சிறப்பு தேர்வு, வல்லுநர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி அலுவலகத்தில் ஏப்ரல் 8-ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த சிறப்பு தேர்வு நடைபெறும். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவது குறித்து இதில் விளக்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 100 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை கிடைக்கும். இதற்கு இலவசமாக முன்பதிவு செய்துகொள்ள <பெயர்><செல்போன் எண்> என்று டைப் செய்து 9444227273 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Comments