8.55 சதவீத பிஎப் வட்டிக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்

வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் உள்ள பிஎப் தொகைக்கு 8.55 % வட்டி வழங்க இபிஎப்ஓ அறங்காவலர் குழு முடிவெடுத்தது. அறங்காவலர் குழு முடிவெடுத்தாலும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் இந்த வட்டி தொகை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த ஐந்தாண்டுகளில் மிக குறைந்த பிஎப் விகிதம் இதுவாகும். 2013-14 மற்றும் 2014-15-ம் நிதி ஆண்டுகளில் 8.75 சதவீத வட்டி வழங்கப்பட்டது. 2015-16-ம் நிதி ஆண்டில் 8.8 சதவீதமும், 2016-17-ம் ஆண்டில் 8.65 % வட்டியும் வழங்கப்பட்டது. தற்போது 8.55 % வட்டி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் வட்டி விகிதத்தை அறிவித்தார். இருந்தாலும் மற்ற அனைத்து சிறு சேமிப்பு விகிதங்களுடன் ஒப்பிடும் போது பிஎப் மீதான வட்டி அதிகமாகும். இந்த வட்டி விகிதத்துக்கு நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டிருந்தாலும் சில கேள்விகளையும் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎப் முதலீடுகளில் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் அந்தத் தவறில் இருந்து தற்காத்துக் கொள்ள கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இதனை பிஎப் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இதுவரை பிஎப் அமைப்பு நஷ்டத்தை சந்தித்ததில்லை அதனால் கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை என பிஎப் அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||