விஐடி பல்கலைக்கழக பி.டெக். பொறியியல் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு மே 9-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடக்கம் .

விஐடி பல்கலைக்கழக பி.டெக். பொறியியல் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு மே 9-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடக்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த பி.டெக் பொறியியல் படிப்புக் கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மே 9-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கவுள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடந்தது. விஐடி வேலூர், சென்னை, போபால், அமராவதி வளாகங்கள் மற்றும் துபாய், குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகள் என மொத்தம் 175 மையங்களில் தேர்வு நடந்தது. கணினி முறையில் நடந்த தேர்வில் 2 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பி.டெக் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில், டெல்லியைச் சேர்ந்த மாண வர் கலாஸ் குப்தா முதலிடம் பிடித்தார். தெலங்கானா மாணவர் சரி கொன்ட அனந்த ராமா ராவ் இரண்டாமிடம், ஒடிசா மாணவர் அனிருத் பானிகி ரஹி மூன்றாமிடம் பிடித்தார். கர்நாடக மாநில மாணவர் சாய் அனிருத் நான்காமிடம், ஜார்க்கண்ட் மாணவர் சுபம் கர் ஐந்தாமிடம், மேற்கு வங்க மாணவர் சுபம் அகர்வால் ஆறாமிடம், சண்டீகர் மாணவர் பிரணவ் கோயல் ஏழாமிடம், டெல்லி மாணவர் சன் சித் அகர்வால் எட்டாமிடம், தமிழக மாணவர் விஷால் ஒன்பதாமிடம், உத்தரப் பிரதேச மாணவர் அன் மோல் குப்தா பத்தாமிடம் பிடித்தனர். நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான கவுன்சலிங் ரேங்க் அடிப்படையில் மே 9-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் 8 ஆயிரம் ரேங்க் பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் கில் பங்கேற்கலாம். 8001 முதல் 14 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்கள் மே 10-ம் தேதியும் 14,001 முதல் 20 ஆயிரம் வரையிலான ரேங்க் பெற்றவர்கள் மே 11-ம் தேதி நடைபெறும் கவுன்சலிங்கில் பங்கேற்கலாம். தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் வேலூர், சென்னை, போ பால், அமராவதி உள்ளிட்ட ஏதாவது ஒரு வளாகங்களில் நடைபெறும் கவுன்சலிங் கில் பங்கேற்கலாம். ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டம் ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் விஐடி நுழைவுத் தேர்வு மற்றும் மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பி.டெக் பொறியியல் படிப்புக்கான 4 ஆண்டுகளுக்கும் 100 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படும். முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீதம், 51 முதல் 100 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீதம், 101 முதல் 1000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படும்.

Comments