புதிய பாடத்திட்டத்தில் உருவாகும் புத்தகங்களின் விலை உயருமா? அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தில் உருவாகும் புத்தகங்களின் விலை உயருமா? அரசு ஆலோசனை | தமிழகத்தில் பள்ளிக்கூடங் களுக்கு 1-ம் வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, பிளஸ்-1 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குனரகம் பாடநூல்களை அச்சடிக்க உள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி புதிய பாடநூல்களுக்கு உரிய சி.டி.க்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில் பெற்று வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் எழுத்துக்கள் பெரியதாக இருக்க வேண்டும், படங்கள் அதிகம் இடம்பெற வேண்டும், பல புதிய தொழில்நுட்பங்கள் இருக்கவேண்டும் என்று அரசு விரும்புகிறது. இப்படி அச்சிடும் காரணத்தால் பாடப்புத்தகத்தின் பக்கங்கள் அதிகமாகி புத்தகங்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. பக்கங்கள் அதிகமாவதால் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்படுமா? என்று தெரியவில்லை. இது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்துவருகிறது. புதிய பாடத்திட்டத்தில் உருவாகும் புத்தகங்களின் விலை உயருமா?

Comments