எய்ம்ஸ் மையத்தில் வேலை வாய்ப்பு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் அதிகாரி மற்றும் அலுவலக பணிகளுக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதி களிலும் எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது போபால் நகரில் செயல்படும் எய்ம்ஸ் மையத்தில் குரூப்-பி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மெடிக்கல் சோசியல் சர்வீஸ் ஆபீசர், டயட்டீசியன், பிரைவேட் செகரட்ரி, பிசியாட்ரிக் சோசியல் ஒர்க்கர், மெடிகோ சோசியல் ஒர்க்கர், அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர், புரோகிராமர், சீப் ேகஷியர், ஆபீஸ் அசிஸ்டன்ட், வொக்கேசன் கவுன்சலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 171 பணியிடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 40 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனு மதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி இளநிலை முதுநிலை பட்டதாரிகள், குறிப்பிட்ட பிரிவுகளில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள், துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பிளஸ்-2 படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும் முறை கணினி அடிப்படையிலான தேர்வு, எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்ப தாரர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-5-2018-ந் தேதியாகும். விண்ணப் பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் //www.aiimsbhopal.edu.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Comments