சேலத்தில் பரிதாபம்: ‘நீட்’ தேர்வுக்கு படித்த அரசு அதிகாரியின் மகன் தற்கொலை முகத்தில் பாலித்தீன் பையை மாட்டி உயிரை மாய்த்த சோகம்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
சேலத்தில் முகத்தில் பாலித்தீன் பையை மாட்டி ‘நீட்’ தேர்வுக்கு படித்த அரசு அதிகாரியின் மகன் தற்கொலை செய்து கொண்டார். அரசு அதிகாரி மகன் சேலம் ராஜாராம் நகர் தமிழ்ச்சங்கம் ரோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் கருப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகன் கெவின்ஹரி (வயது 19). இவர் கடந்த ஆண்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். மேலும் அவர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக ‘நீட்’ தேர்வு எழுதினார். இதில் தோல்வி அடைந்தார். இருப்பினும், வேறு பாடப்பிரிவு எடுத்து படிக்காமல் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார். பாலித்தீன் பையை மாட்டி சாவு இதற்காக கெவின்ஹரி சேலத்தில் உள்ள ‘நீட்’ தேர்விற்கான தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் வீட்டில் இருந்தே படித்து வந்தார். அவ்வப்போது அவர் செல்போனில் நீண்டநேரம் செலவழித்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரிடம், ‘நீட்’ தேர்வுக்கு இன்னும் கொஞ்சம் நாட்களே இருப்பதால் நன்றாக படி என்று கூறியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை அவரது தாயார் கெவின்ஹரி அறைக்கு சென்று கதவை தட்டினார். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கெவின்ஹரி, தன்னுடைய முகத்தில் 2 பாலித்தீன் பையை சுற்றியதுடன் கயிற்றால் கட்டி மூச்சுத்திணறி இறந்து கிடந்தார். நீல திமிங்கலம் விளையாட்டு இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கெவின்ஹரி ‘நீட்’ தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது செல்போனில் நீல திமிங்கலம் விளையாட்டை விளையாடி அதனால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கெவின்ஹரி தன்னுடைய உடல் எடை அதிகமாக இருப்பதாக பலரிடம் கூறி புலம்பி வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||