எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: அறிவியல் வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது மாணவர்கள் கருத்து

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி தொடங்கியது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று உள்ளது. நேற்று அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தேர்வு குறித்து கூறியதாவது:- அறிவியல் வினாத்தாளில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 3 வினாக்கள் பாடத்தில் இருந்து நேரிடையாக கேட்கப்படவில்லை. அதன் காரணமாக அந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. 5 மதிப்பெண் கேள்வியில் ஒரு கேள்வி இதுவரை நடந்த தேர்வுகளில் கேட்டதில்லை. மற்ற கேள்விகள் எளிதாக இருந்தன. மொத்தத்தில் தேர்வு சற்று கடினமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் காப்பி அடித்ததாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 பேர் பிடிபட்டனர். வருகிற 20-ந்தேதி சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவடைகிறது.

Comments