மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக எம்.சத்தியவதி பொறுப்பேற்பு புதுச்சேரி அரசின் தலைமை செயலாளராக இருந்தவர்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
தொழிலாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த எம்.சத்தியவதி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) உறுப்பினராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு யு.பி.எஸ்.சி. தலைவர் வினய் மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான எம்.சத்தியவதி, 1982-ம் ஆண்டு, யூனியன் பிரதேச பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனவர். 35 ஆண்டு கால அரசுப்பணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். புதுச்சேரி மாநில அரசின் தலைமை செயலாளராகவும் இருந்துள்ளார். அவரது பணியிட மாற்றத்தால், காலியாக உள்ள தொழிலாளர் நலத்துறை செயலாளர் பொறுப்பு, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Comments