மின்வாரிய கள உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

சிஐடியு தொழிற்சங்கம், அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மின்வாரிய கள உதவியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி யில் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 900 கள உதவியாளர் பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்ப மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மின்வாரிய சிஐடியு தொழிற்சங்கமும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கள உதவியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் டி.ஜெ.நினைவகம், எண்.177, சிங்கண்ண செட்டி தெரு, சிந்தாரிப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் வரும் மே 1-ம் தேதி முதல் வார இறுதி நாட்களில் நடைபெறும். இதில் ஐடிஐ (எலக்ட்ரீசியன், வையர்மேன் டிரேட்) படித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 9444057470, 9444250709, 9841744639 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||