வீட்டு வசதி வாரிய வீடுகளை பணி ஓய்வுக்கு பிறகு காலி செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
நந்தனம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கடந்த 1966-ல் அரசு ஊழியருக்கான ஒதுக்கீட்டில் வாடகைக்கு குடியேறியவர் ரத்தினம். இவர் கடந்த 2003-ல் காலமானார். இதையடுத்து வீட்டைக் காலி செய்யும்படி வீட்டு வசதித் துறை அவரது மகள் மணிமேகலைக்கு கடந்த 2007-ல் நோட்டீஸ் அனுப்பியது. வீட்டைக் காலி செய்யும் வாரியத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மணிமேகலை வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசு ஊழியர்களின் வசதிக்காகத் தான் வீட்டு வசதி வாரிய வீடுகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் முறைப்படி வீட்டை காலி செய்து தரவேண்டும். ஆனால் இந்த நடைமுறையை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. பணி ஓய்வுக்குப் பிறகும் அதே வீட்டில் வசிப்பதற்கு உரிமை கோர முடியாது. இந்த மனோபாவம் மாற வேண்டும். எனவே மனுதாரர் ஜூலை 31-க்குள் வீட்டை காலி செய்து வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் வீட்டைக் காலி செய்ய வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||