தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள உதவி மருத்துவ அதிகாரி பணி.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு உதவி மருத்துவ அதிகாரி (லெக்சரர்- யோகா மற்றும் நேச்சுரோபதி) பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். நேச்சுரோபதி டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்திய மருத்துவ துறையில் தமிழக வாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||