முதுகலை, எம்.பில்., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
முதுகலை, எம்.பில்., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் பல்கலைக்கழகத் தில் வரும் கல்வி ஆண்டில் முதுகலை பட்டப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் சேர நாளை (புதன் கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018-2019-ம் கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் தின் பல்வேறு துறைகளில் விருப்பப் பாடத்தேர்வு திட்டத் தின் (சிபிசிஎஸ்) கீழ் முதுகலை பட்டப் படிப்பு, எம்.பில்., முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்களை வருகிற 18-ம் தேதி (புதன் கிழமை) முதல் பதிவிறக் கம் செய்யலாம். ஆன்லைனில் பதிவுசெய்யலாம். முதுகலை பட்டப் படிப்பு மற்றும் எம்.பில். படிப்புகளில் சேர ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் ஜுன் 18-ம் தேதி ஆகும். அதேபோல், முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு ஜூலை 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம், விளக்கவுரை மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.unom.ac.in) இருந்து அறிந்துகொள்ளலாம்.

Comments